அஷ்டமி தினத்தன்று காலபைரவரை இப்படி வணங்குங்கள்! அவர் அள்ளித் தரும் வரங்களைப் பாருங்கள்!

Photo of author

By Kowsalya

அஷ்டமி தினத்தன்று காலபைரவரை இப்படி வணங்குங்கள்! அவர் அள்ளித் தரும் வரங்களைப் பாருங்கள்!

Kowsalya

நவக்கிரகங்களால் உண்டாகக் கூடிய நாகதோஷம், காலசர்ப தோஷம் போன்ற தோஷங்களில் இருந்து நீக்கி இன்பத்தை தரவல்ல மகா சக்தி வாய்ந்த மந்திரம்.

பைரவர் காயத்ரி மந்திரம்:

ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே ஸ்வாந வாஹாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்”

 

“ஓம் திகம்பராய வித்மஹே தீர்கதிஷணாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்” .

 

பைரவரை அஷ்டமி தினத்தன்று பைரவருக்குரிய காயத்ரி மந்திரங்களை 108 முறை முதல்1008 முறை வரை துதித்து வணங்குபவர்களுக்கு பணம் பொருள் ஆகியவற்றின் சேமிப்பு அதிகரிக்கும். திருமணம் தாமதமவர்களுக்கு நல்ல முறையில் திருமணம் விரைவில் நடைபெறும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான அழகான குழந்தை பிறக்கும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். தரித்திரங்கள், பீடைகள் ஒழியும். தொழில், வியாபாரங்களில் நஷ்ட நிலை நீங்கி லாபங்கள் பெருகும். எதிரிகளால் ஏற்படும் தொந்தரவுகள் நீங்கும். துஷ்ட சக்திகளின் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும். ஆபத்துகளை அறவே நீக்கும்.