கபடி போட்டி! தபங் டெல்லி அணி தகுதி!!
ஐதராபாத்தில் நடக்கும் புரோகபடி லீக் போட்டியில் தபங் டெல்லி அணி ஆறாவது அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. புரோ கபடி லீக் போட்டியின் 9-வது சீசன் விறுவிறுப்பாக பெங்களூரில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கி தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. 12 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் லீக் சுற்று தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று முடிந்த உடன் பிளே-ஆப் சுற்று தொடங்க உள்ளது.
இந்த போட்டியில் முதன் முறையாக தமிழ் தலைவாஸ் அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. யுபி யோத்தா உடன் நடந்த இந்த போட்டியில் சிறப்பான ஆதிக்கம் செலுத்தி 43-28 என்ற புள்ளி கணக்கில் வெற்றிப்பெற்று முதல் முறையாக இந்த அணி தகுதிப் பெற்றது.
ஏற்கனவே 5 அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறி விட்ட நிலையில் நேற்று நடந்த ஒரு பரபரப்பான ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தபங் டெல்லி- பெங்கால் வாரியர்ஸ் இடையேயான பரபரப்பான ஆட்டத்தில் 46-46 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. 10 வெற்றி 10 தோல்வி 2 டிரா என 63 புள்ளிகளுடன் தனது கடைசி லீக்கில் விளையாடி ஆறாவது அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிப்பெற்றது.
இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதியில் விளையாடும். மற்ற 4 அணிகள் சுற்றில் விளையாடி அதில் இருந்து இரண்டு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். நாளையுடன் லீக் சுற்று முடியப்போகிறது. வருகின்ற 13-ம் தேதி அரையிறுதிக்கு (வெளியேற்றுதல் சுற்று) தேர்வு செய்யும் போட்டியும் டிசம்பர் 15-ம் நாள் அரையிறுதி போட்டிகளும் 17-ம் தேதி இறுதிப்போட்டியும் நடக்க இருக்கிறது.