புகழ்பெற்ற சாக்ஸபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் மறைவு! இசையுலகம் இரங்கல்

Photo of author

By Parthipan K

புகழ்பெற்ற சாக்ஸபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் மறைவு! இசையுலகம் இரங்கல்

மங்களூரு: பிரபல சாக்ஸபோன் இசை கலைஞர் கத்ரி கோபால்நாத் காலமானார். அவருக்கு வயது 69.

கர்நாடகாவின் மங்களூருவில் 1949 டிசம்பர் 11ம் தேதி பிறந்தவர் கத்ரி கோபால்நாத். கே.பாலச்சந்தரின் இயக்கத்தில், இளைய திலகம் பிரபு நடிப்பில் வெளியான டூயட் படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து கோபால்நாத் இசை பணியாற்றியுள்ளார்.

அந்த படத்தில் அவரின் இசை பெருத்த வரவேற்பை பெற்றது. கத்ரி கோபால் நாத்தின் சேவையை பாராட்டி 2004ல் மத்திய அரசு பத்மஸ்ரீ வழங்கியது. தமிழக அரசின் கலைமாமணி பட்டத்தையும் அவர் பெற்றுள்ளார்.

கடந்த 3 மாதங்களாக கடுமையான உடல்நலக்குறைவால் அவர் பாதிக்கப் பட்டிருந்தார். அதற்கான சிகிச்சையும் அவர் மேற்கொண்டார்.  இருப்பினும், பலனளிக்காமல் மங்களூருவில் தனியார் மருத்துவமனையில் கத்ரி கோபால் நாத் காலமானார்.

அவருக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். கத்ரி கோபால்நாதின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.