காடுவெட்டி குருவின் மரணத்தை வைத்து அரசியல் செய்த திமுக! மரணஅடியை கொடுத்த வன்னியர்கள்
மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு அவர்களின் மரணத்தை வைத்து அரசியல் செய்த திமுகவில் உள்ள முக்கிய வன்னிய பிரமுகர்கள் தங்கள் பிரச்சாரம் பாமக நிறுவனர் ராமதாஸுக்கு எதிராக பலன் அளிக்கவில்லை என்று கலக்கத்தில் உள்ளனர்!
பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வன்னியர் சங்க தலைவராகவும் சிறப்பாக செயல்பட்டு அச்சமுதாய இளைஞர்களின் கதாநாயகனாக திகழ்ந்தார் காடுவெட்டி குரு எனப்படும் ஜெ.குருநாதன்.
பாமக நிறுவனர் ராமதாசுக்கு நிகராக செல்வாக்குப் பெற்றிருந்தார் அவருடைய கம்பீரமான பேச்சு ஆளும் வர்க்கத்தையும் எதிர்வர்கத்தையும் கதிகலங்க வைக்கும் அளவில் இருக்கும், இதன் காரணமாகவே கலைஞர் ஆட்சிக் காலத்தில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டார், அதன்பிறகு ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும்போது வன்னியர் சங்கக் கலவரத்திற்கு ஜெ.குரு தான் காரணம் என்று அவர் மீது ஐந்து முறை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடுத்தடுத்து கைது செய்தது, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் அவர்களின் மேல்மட்ட செல்வாக்கின் காரணமாக வழக்கிலிருந்து காடுவெட்டி குருவை காப்பாற்றினார்கள்,
பாமகவின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்காற்றியுள்ளார் காடுவெட்டி குரு, விஜயகாந்த் தேமுதிக கட்சி ஆரம்பித்த பிறகு வன்னிய இளைஞர்கள் பெருமளவில் சேர்ந்தனர், ஒரு கட்டத்தில் பாமகவை நிலைகுலையச் செய்தது, இதனை தனது கம்பீரமான பேச்சுக்கள் மற்றும் சாதி உணர்வுகளை தூண்டி மீண்டும் பாமகவிடம் சேர வைத்ததில் பெரும் பங்கு வகித்தார்,
காடுவெட்டி குரு ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக சிறப்பாக செயல்பட்டார், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பூட்டிய வரலாறும் அவருக்கு உண்டு, குருவை கொலை செய்ய பல முயற்சிகள் நடந்தவண்ணம் இருந்தன, இதிலிருந்து பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் காடுவெட்டி குருவின் தளபதி என்று சொல்லப்படும் வைத்தி அவர்களும் காப்பாற்றி வந்தனர்,
தனது மரணம் தான் ஐயாவிடம் இருந்து என்னை பிரிக்கும் என்று ஒவ்வொரு மேடையிலும் உணர்ச்சிமிக்க பேசுவார், இப்படிப்பட்ட சூழ்நிலையில் நுரையீரல் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார், இவர் மரணத்திற்குப் பிறகு காடுவெட்டி குரு அவரின் மகன் கனலரசனை வைத்து அரசியல் செய்ய முயன்றனர், இது வன்னிய இளைஞர்களை கடும் கோபத்தில் உள்ளாக்கியது அவர் தவறான பாதையில் செல்வதாக குருவின் உறவினர்களே இராமதாசிடம் புகார் அளித்தனர், காலப்போக்கில் மருத்துவர் ராமதாசிடம் தஞ்சமடைந்தார் குருவின் மகன் கனலரசன்,
குருவின் தங்கை ராமதாஸுக்கு எதிராக கடுமையாக பேச வைத்து அழகு பார்த்தனர், மாவீரன் ஜெ.குரு வன்னியர் சங்கம் என்ற பெயரில் அமைப்பு ஒன்றை துவங்கி வன்னியர் சங்கத்திற்கு எதிராக செயல்படத் துவங்கினர் அவருடைய நெருங்கிய உறவினரான வி.ஜி.கே மணி, இதற்கு பின்னால் நின்று செயல்படுவது திமுகதான் என்று பாமகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்,
விக்ரவாண்டி இடைத்தேர்தலில் முழுக்க முழுக்க வன்னியர்களின் பலமிக்க தொகுதி என்பதால் காடுவெட்டி குருவின் மரணத்தை வைத்து திமுகவில் உள்ள வன்னிய பிரமுகர்கள் பிரச்சாரம் செய்தனர், ஜெகத்ரட்சகன் காடுவெட்டி குரு இறந்தபோது அவரது உடலை எடுத்துச் செல்ல 3 லட்சம் கொடுத்து உதவியதாக தெரிவித்தார், ஆனால் அவர் காடுவெட்டி குருவின் இறுதி சடங்குக்கு கூட கலந்து கொள்ளவில்லை. துரைமுருகன்,எம்ஆர்கே பன்னீர்செல்வம் போன்றவர்கள் காடுவெட்டி குருவின் குடும்பம் வறுமையில் உள்ளதாகவும் அவர்கள் குடும்பத்தை ராமதாஸ் கைவிட்டுவிட்டார் என்று தெரிவித்த வண்ணம் இருந்தனர்,
இதற்கு ஒருபடி மேல் தான் இருந்தவரை வேல்முருகனை கதற வைத்தவர் காடுவெட்டி குரு, அவர் இறந்த பிறகு அவர் புகழ் பாடி வன்னியர் சமுதாய இளைஞர்களை தன் பக்கம் இழுக்க முயன்று வருகிறார், இன்றளவும் பலனளிக்கவில்லை, பாமக நிறுவனர் ராமதாஸ் தான் வன்னியர் சமுதாயத்திற்கு தலைவர் என்பது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி மூலம் தெளிவாக தெரிகிறது, நானும் வன்னியர் தான் என்று சொல்லிக்கொள்ளும் வன்னிய தலைவர்கள் திருமாவளவனுடன் கைகோர்த்து செயல்படுவதை வன்னியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை,
வன்னியர் சமுதாய பெண்களை குறிவைக்கும் ஒரு கும்பலுக்கு ஆதரவாக இவர்கள் செயல்படுகிறார்கள் என்று பாமகவினர் புரியவைத்தனர், தான் உயிரோடு இருக்கும் வரை திருமாவளவனை கடுமையாக எதிர்த்து வந்தவர் மாவீரன் காடுவெட்டி குரு,
ஆனால் அவரை வைத்துக்கொண்டே காடுவெட்டி குருவின் குடும்பத்தைப் பற்றியும் அவருடைய மரணத்தைப் பற்றியும் பேசி அரசியல் செய்த வன்னியர் பிரமுகர்களுக்கு இடைத்தேர்தல் முடிவுகள் இவர்களுக்கு மரண பயத்தை உண்டாக்கி உள்ளது என்பது நிதர்சனமான உண்மை!