NTK ADMK: எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி வைத்து பல ஆண்டுகளாக கட்சிக்குள்ளிருந்த மூத்த நிர்வாகிகள் கூட்டணி கட்சி என பலவற்றை இழந்து வருகிறார். அதிலும் இவர் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் இவருடன் கூட்டணி வைக்கலாம் என்று திட்டம் தீட்டிய பெரும்பாலானோர் அதனை கை விட்டுவிட்டனர். தற்போது திமுக-விற்கு எதிராக ஒரு அணியை திரட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம் என்ற சுற்று பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
அந்த சுற்றுப்பயணத்திற்கு திமுக கூட்டணி கட்சிகளான விசிக சிபிஎம் உள்ளிட்டவைகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். ஏனென்றால் இவர்கள் திமுகவுடன் கூட்டணியிலிருந்தாலும் மறைமுகமாக அவர்களை பற்றி சாடி பேசுவதுண்டு. அதனால் எடப்பாடி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் அவர்கள் கலந்துக்கொள்ள வில்லை. இதற்கு அடுத்ததாக ஒருமித்த கருத்துடைய கட்சிகள் கலந்துக் கொள்ள வேண்டும். அதில் தமிழக வெற்றிக் கழகம் அடங்கும் என கூறியிருந்தார். மேலும் நாம் தமிழருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
தற்போது இது ரீதியாகத் தான் இடும்பாவனம் கார்த்திக் பேசியுள்ளார். அதில், அதிமுக கடந்த மக்களவை தேர்தலின் போதே இதேபோல அழைப்பு விடுத்தனர். ஆனால் அதனை ஏற்கவில்லை, திராவிட கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்று திருமாவளவன் கூறியுள்ளார். இவை இரண்டும் குட்டையில் ஊறிய மட்டைகள் தான் எனக் கூறினார். நாதக தனித்து தான் போட்டியிடும். அதேபோல விஜய்க்கும் பாஜக அல்லது அதிமுக வுடன் கூட்டணி வைக்கலாம் என்ற எண்ணம் உள்ளது.
இதில் தமிழகத்திற்கு அதிமுக திமுக என இரு திராவிட கட்சிகளும் தமிழகத்திற்கு தேவையில்லை. மேலும் நாதக தனித்து தான் போட்டியிடும். அதனால் எடப்பாடி அழைப்புக்கு நாங்கள் செல்ல மாட்டோம் என நேரடியாகவே கூறியுள்ளார்.