’கைதி’ போன்ற படங்கள் தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமானது: பிரபல தயாரிப்பாளர்

0
152

’கைதி’ போன்ற படங்கள் தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமானது: பிரபல தயாரிப்பாளர்

தமிழ் சினிமாவுக்கு கைதி போன்ற திரைப்படங்கள் அதிக அளவில் வெளிவந்தால் தான் ஆரோக்கியமாக இருக்கும் என்று பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் அவர்கள் கூறியுள்ளார்

கடந்த தீபாவளியன்று வெளியான ’கைதி’ திரைப்படம் மிக அருமையாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும், பில்டப் காட்சிகள் இல்லாமல், நாயகிகள் குத்து டான்ஸ் இல்லாமல், பாடல்கள் இல்லாமல் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படம் பொதுமக்களுக்கு மிகவும் விருப்பம் உள்ள படமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்

அதுமட்டுமின்றி இந்தப்படம் முறையாக, அளவான செலவில் தயாரிக்கப்பட்டதாகவும், அதே போல் நியாயமான விலைக்கு விற்கப்பட்டதாகவும் இதனால்தான் இந்தப் படம் மிகப் பெரிய லாபம் பெற்று தயாரிப்பாளர் உள்பட அனைத்து தரப்பினருக்கும் லாபம் பெற்று உள்ளார்கள் என்றும் தயாரிப்பாளர் கே ராஜன் அவர்கள் கூறினார்

முதலில் பிகில் படத்திற்கு அதிக தியேட்டர்களில் கிடைத்த போதிலும் ஐந்தாவது நாளே அந்த படம் பல தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டு அதற்கு பதிலாக ‘கைதி’ திரைப்படம் திரையிட்டதில் இருந்தே மக்களின் உண்மையான ஆதரவு எந்தப் பக்கம் என்பது உறுதியாகி விட்டது என்றும் தமிழக மக்கள் ரசனைகளில் மிகச் சிறந்தவர்கள் என்றும் கோடி கோடியாய் கொட்டி ஒரு படம் எடுத்தாலும் திருப்தி இல்லை என்றால் அந்த படத்தை விலக்கி விடுவார்கள் என்றும் குறைவான பட்ஜெட்டில் எடுத்தாலும் நல்ல படம் என்றால் ஆதரவு தருவார்கள் என்றும் கே.ராஜன் மேலும் தெரிவித்தார்

ரூ.28 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ‘கைதி’ திரைப்படம் இப்பொழுது வரை ரூ.42 கோடி வசூலாகி வருவதாகவும் இன்னும் ஒருவார வசூல் மற்றும் சாட்டிலைட் உரிமையில் கிடைக்கும் தொகை ஆகியவற்றை சேர்த்தால் இந்த படம் 100% லாபத்தை கொடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

Previous articleகடலூர் மாவட்டச்செயலாளர் பதவிகளை வன்னியர்களுக்கே கொடுத்த EPS OPS! பாமகவுக்கு நெருக்கடி கொடுக்கவா?
Next articleஇன்னும் இரண்டே நாள் தான் கெடு!ஜனாதிபதி ஆட்சி என பாஜக மிரட்டல்!