பாகுபலி ஸ்டைலில் மகனுடன் போட்டோஷூட்… இணையத்தில் கலக்கும் காஜலின் லேட்டஸ்ட் புகைப்படம்

Photo of author

By Vinoth

பாகுபலி ஸ்டைலில் மகனுடன் போட்டோஷூட்… இணையத்தில் கலக்கும் காஜலின் லேட்டஸ்ட் புகைப்படம்

தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக விளங்கியவர் காஜல் அகர்வால். இவர் 2004ஆம் ஆண்டு திரையுலகிற்கு அடி எடுத்து வைத்தார். சிறிது சிறிதாக தனது முயற்சியினால் முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். தெலுங்கு கன்னடம் தமிழ் என அனைத்து மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் நடிகர் பரத்துடன் பழனி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

2008 ஆம் ஆண்டு வரை இவர் நடித்த படங்கள் எதுவும் சரிவர ஓடவில்லை. இவர் 2009ம் ஆண்டு நடித்த ராஜமௌலி இயக்கிய மகதீரா மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படம் அவருக்கு பெரிய அளவில் புகழைப் பெற்று தந்தது. அதையடுத்து அவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையானார்.

தமிழில் விஜய்யுடன் துப்பாக்கி ஜில்லா சூர்யாவுடன் மாற்றான் போன்ற தொடர் வெற்றி படங்களை குவிக்கத் தொடங்கினார். காஜல் அகர்வால் 2020 ஆம் ஆண்டு தொழிலதிபர் கௌதம் கிச்சல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது கல்யாணம் நட்சத்திர ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது. அவர்களுக்கு தற்போது நீல் என்ற மகன் பிறந்திருக்கிறான்.

சமீபகாலமாக தனது மகனுடன் அதிகளவில் புகைப்படங்களை எடுத்து அதை பகிர்ந்து வரும் காஜல், தற்போது பாகுபலி படத்தில் சத்யராஜ், பிறந்த குழந்தையான பாகுபலியின் காலை தனது தலையில் எடுத்து வைத்து தன்னை அவனுக்கு அர்ப்பணிப்பது போல தற்போது தனது மகனுடன் புகைப்படம் எடுத்து அதை தனக்கு திருப்புமுனைப் படத்தைக் கொடுத்த எஸ் எஸ் ராஜமௌலிக்கு அந்த புகைப்படத்தை அர்ப்பணித்துள்ளார்.