அதை மட்டும் கேட்காதீர்கள் ; சொன்னால் என்னைக் கொன்றுவிடுவார்கள் ! நழுவிய காஜல் அகர்வால்

Photo of author

By Parthipan K

அதை மட்டும் கேட்காதீர்கள் ; சொன்னால் என்னைக் கொன்றுவிடுவார்கள் ! நழுவிய காஜல் அகர்வால்

இந்தியன் 2 படத்தில் நடிக்கும் காஜல் அகர்வால் அந்த படத்தில் தான் நடிக்கும் கதாபாத்திரம் பற்றி தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் அவருடன் காஜல் அகர்வால், விவேக், பாபி சிம்ஹா, சித்தார்த் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்து வருகின்றனர். 22 வருடங்களுக்கு முந்தைய ஹிட் படமான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

இப்படத்தில் கமல் சேனாதிபதி எனும் 90 வயது முதியவராக கமல்ஹாசன் நடிக்கிறார். அவரது மனைவியாக அமிர்தவள்ளி என்ற கதாபாத்திரத்தில் 85 வயது மூதாட்டியாக காஜல் நடித்து வருகிறார். இந்தியன் முதல் பாகத்தில் சுகன்யா நடித்த கதாபாத்திரத்தில்தான் தற்போது காஜல் நடித்துவருகிறார்.

சிங்கப்பூர் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அவரது மெழுகு சிலை நிறுவப்பட உள்ளது. இந்நிலையில், மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை காஜல் அகர்வால்,செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இந்தியன் 2 படம் பற்றி கேட்கப் பட்டபோது, ’படத்தில் நான் 85 வயது கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேஅ. இதற்கு மேல் என்னைக் கேட்காதீர்கள். எதாவது சொன்னால் என்னைக் கொன்று விடுவார்கள்’ என வெகுளியாகக் கூறியுள்ளார்.

இந்தியன் 2 திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளுக்குப் பிறகு இப்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. திட்டமிட்டப்படி படப்பிடிப்பு முடிந்தால் படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.