ஜமிந்தார் வீட்டு பெண்ணாக மாறிய காஜல்!! சிலை போல் தோற்றமளிக்கும் நடிகை!!

0
197
Kajal becomes Zamindar housewife !! Actress who looks like an idol !!
Kajal becomes Zamindar housewife !! Actress who looks like an idol !!

ஜமிந்தார் வீட்டு பெண்ணாக மாறிய காஜல்!! சிலை போல் தோற்றமளிக்கும் நடிகை!!

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் உள்ளனர். ஆனால் அவர்களை திரையில் நல்ல கதாபாத்திரங்களில் காட்டுவது இயக்குநர்கள் தான். புகழ்பெற்ற இயக்குனர்கள் பலரும் தனது சினிமா வாழ்க்கையில்  பல வெற்றிகரமான படங்களை இயக்கி தற்போது புகழின் உச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் யாமிருக்க பயமேன் என்ற பேய் படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமான இயக்குனர் டீகே. அதன் பிறகு இவர் காட்டேரி, கவலை வேண்டாம் என படங்களை இயக்கினார். தமிழ் சினிமாவில் பெரிதாக பல படங்கள் இயக்கவில்லை என்றாலும் இவரின் ஒரு சில படைப்புகள் ரசிகர் மத்தியில் பெரும் அளவில் பேசப்பட்டது.

அதை தொடர்ந்து தற்போது கருங்காப்பியம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் காஜல் அகர்வால், ரெஜினா கசாண்ட்ரா, ரைசா வில்சன் மற்றும் ஜனனி உட்பட பல முன்னணி நடிகைகள் இடம்பெற்றுள்ளனர். இப்படி தமிழ் சினிமா பட முன்னணி  நடிகைகள் ஒரே படத்தில் நடிப்பது இதுவே முதல்முறை. அப்படி இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பல எதிர்பார்ப்புகள் உள்ளன. மேலும் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் அண்மையில் வெளியாகியிருந்தது. இதை தொடர்ந்து இந்த படத்தை பற்றிய சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. படத்தில் காஜல் அகர்வால் இரண்டு வித கேரக்டரில் நடிக்க உள்ளார். மேலும் இதில் ஒரு கதாபாத்திரமாக 1940 களுக்கு முன்பு வாழ்ந்த பண்ணையார் வீட்டு பெண்ணாக காட்சியளிக்கிறார். மேலும் கிராம மக்களின் நலனுக்காக செய்த விடயம் ஒன்று அவருக்கு விபரீதத்தில் முடிகிறது. அதன் தொடர்ச்சியை அவர் தற்போதைய கால கட்டத்தில் தொடர்வதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தகவல் தற்போது படக்குழுவினரால் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து இயக்குனர் டீகே கூறுவதாவது, இது புராணக் கதைகள் அல்ல, அடிப்படையில் பல சுவாரசியமான விடயங்களை கொண்ட ஒரு கதை. இந்த படத்தின் பார்வையாளர்கள் வித்தியாசமான காஜலை பார்க்க முடியும். மேலும் அவருடைய தோற்றம் கூட மிகவும் வித்தியாசமானது. அந்த கால ஜமீன்தார் வாழ்க்கையின் வாழ்க்கை முறையை ஆராய்ந்து மற்றும் அதை கற்றுக்கொண்டு காஜல் கேரக்டர் செய்துள்ளோம். பொள்ளாச்சியில் படமாக்கப்பட்ட அவரது பகுதிக்கு ஒளிப்பதிவு, இசை எல்லாவற்றையும் வித்தியாசப்படுத்தி இருக்கிறோம். மேலும் இது ஒரு ஃபேண்டஸி கலந்த திரைப்படமாக உருவாகியுள்ளது என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து இந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது.

Previous articleகுளோசிங் பெல்!! இன்று பங்கு சந்தை சரிந்தது!! ஆக்சிஸ் வங்கி சரிவை சந்தித்தது!!
Next articleஇரண்டு டோஸ் தடுப்பூசி போட்டும் கொரோனாத் தொற்றுப் பாதிக்கப்பட்டுள்ளதா! மக்களே உஷார்!