நாக தோஷத்திற்கான காரணமும் பரிகாரமும்!

0
185

ஒருவருடைய ஜாதகத்தில் சில கிரகங்கள் சரி இல்லாமல் இருப்பதன் காரணமாகவும், நாம் செய்யும் சில செயல்களின் விளைவுகளை நமக்கு தோஷங்கள் ஏற்படுகின்றது. அப்படிப்பட்ட ஒரு தோஷம்தான் நாகதோஷம். ஒருவருக்கு மிகுந்த பாதிப்புகளை உண்டாக்கும் நாகதோஷம் அதற்கான காரணங்களையும், அதற்கான பரிகாரங்களையும், இங்கே நாம் காணலாம்.

ஒருவருடைய ஜாதகத்தில் ராகு அல்லது கேது உள்ளிட்ட கிரகங்கள் லக்னத்திற்கு 2, 5 7 8 ஆகிய இடங்களில் இருக்குமானால் அந்த நபருக்கு நாக தோஷம் ஏற்படுகிறது. அதோடு பாம்புப் புற்றுகளை இடிப்பதாலும் , நாகப்பாம்புகளை கொள்வதாலும், நாக தோஷம் ஏற்படுகின்றது. இந்த தோஷத்தால் திருமண தாமதம், கணவன்-மனைவி பிரிதல் , குழந்தைகள் பாக்கியம் இல்லாமல் போவது, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் தொழில் வியாபாரத்தில் நஷ்டம் திடீர் விபத்துகள் போன்ற பலன்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு நாகதோஷம் இருக்கின்ற நபர்கள் நாள்தோறும் காலையில் முருகப்பெருமானின் கோவிலுக்கு சென்று அவரை வழிபட்டு வருவது நல்லது. கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள் வீட்டில் வள்ளி தெய்வானையுடன் இருக்கும் முருகப்பெருமானின் திருவுருவப் படத்திற்கு முன்பு விளக்கேற்றி வழிபட்டு வருவது நாக தோஷத்தின் கடுமையான தன்மையை குறைக்கும் என்று சொல்லப்படுகிறது.

செவ்வாய்க்கிழமைகளில் நரசிம்மரை வழிபட்டு வருவதும் மிகவும் சிறந்தது. பாம்பு புற்று இருக்கின்ற கோவிலுக்கு சென்று புற்றில் பால் ஊற்றி வழிபட்டு அந்த கோவிலில் இருக்கும் ராகு, கேது விக்கிரகங்களுக்கு விளக்கேற்றி வழிபட்டு வருவதும் நாக தோஷத்திற்கு மிகச் சிறந்த பரிகாரம் என்று சொல்லப்படுகிறது.

வெள்ளியால் செய்யப்பட்ட மோதிரத்தில் கோமேதக ரத்தினத்தை பதித்து வலது கையின் நடுவிரலின் அணிந்து கொள்வதால் நாகதோஷம் கொண்டவர்களுக்கு தீய தோஷம் ஏற்படாமல் தடுக்கும். அன்றாட உணவிற்கு கஷ்டப்படும் ஏழைகளுக்கு ஏதேனும் ஒரு பருப்பு வகையை தானமாக கொடுப்பது நாக தோஷத்திற்கு சிறந்த பரிகாரம் என்று சொல்லப்படுகிறது.

Previous articleதாலிபனுக்கு பயந்து காபுலில் திடீரென படைகளை குவிக்கும் அமெரிக்கா, இங்கிலாந்து! உச்சக்கட்ட பதற்றத்தில் ஆப்கன்!!
Next articleவீடியோ : திடீரென ரெண்டாக உடைந்து மூழ்கும் கப்பல்! 24 கிலோ மீட்டருக்கு எண்ணெய் பரவல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here