வீடியோ : திடீரென ரெண்டாக உடைந்து மூழ்கும் கப்பல்! 24 கிலோ மீட்டருக்கு எண்ணெய் பரவல்!

0
78
Ship
Ship

வடக்கு ஜப்பானில் சென்றுக் கொண்டிருந்த பானாமா கொடி கட்டிய சரக்குக் கப்பல் ஒன்று இரண்டாக உடைந்து மூழ்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உலகம் முழுவதும் காட்டுத்தீ, கனமழை, வெள்ளம், அனல் காற்று போன்று பல்வேறு இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க, மனிதனால் ஏற்படும் பாதிப்புகள் பெரிய அளவில் பூமியை அழிவுக்கு இழுத்துச் செல்கிறது.

வடக்கு ஜப்பான் கடற்கரையில் சென்றுக் கொண்டிருந்த பனாமா நாட்டின் கொடி கட்டிய சரக்குக் கப்பல் ஒன்று திடீரென விபத்து ஏற்பட்டு, இரண்டு துண்டாக பிரிந்தது. கப்பல் உடைந்ததால், அதிலுருந்த எரிபொருள் கடலில் கலந்து நீரோட்டத்திற்கு ஏற்ப பரவி வருகிறது.

கப்பலில் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப் பட்டனர். எனினும், கப்பல் மூழ்கி வருகிறது. அதே நேரத்தில், தொடர்ந்து எரிபொருள் கசிந்து வருவதால், கடல் முழுவதும் பரவி வருகிறது. தற்போது 24 கிலோ மீட்டர் தொலைவுக்கு எரிபொருள் எண்ணெய் பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கும் அதே வேலையில், எண்ணெய் பரவி வருவதால், கடல்வாழ் உயிரிணங்களுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கடல் வளம் பெரிய அளவில் பாதிக்கப்படும் ஆபத்து இருப்பதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

அண்மையில், இலங்கை அருகே சரக்குக் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டு எண்ணெய் கசிந்ததால், அந்நாட்டின் கடற்பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சென்னை அருகே எண்ணூரில் ஒரு சரக்குக் கப்பலில் இருந்து கசிந்த எண்ணெய்யால், சென்னையை சுற்றியுள்ள கடல் முழுவநும் எண்ணெய் பரவி இயற்கை சூழலையே மாற்றியது அனைவரும் அறிந்ததே!

மனிதர்களின் செயலால் இயற்கை ஒருபுறம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இதுபோன்ற விபத்துக்களால் பூமி அழிவை நோக்கிச் செல்கிறது என்றால் அது மிகையாகாது.