தமிழக அரசு குடும்ப தலைவிகளுக்கு மாதமாகவும் ரூ.1000 வழங்கும் திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
Iஇந்நிலையில் சில குடும்ப தலைவிகள் விண்ணப்பித்திருந்த விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டது.இதனைத்தொடர்ந்து தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் காலஅவகாசம் கொடுத்திருந்தது.ஆனால் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மையங்களில் பல விண்ணப்பதாரர்கள் ஒரே நேரத்தில் விண்ணப்பித்ததால் இணையம் சில மணி நேரங்களுக்கு முடங்கியது. விண்ணப்பதாரர்கள் இந்த தாமதத்தால் அதிருப்தியடைந்தனர்.
இந்த இடையூறு சரிசெய்யபட்ட நிலையில் மக்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டது.மேலும் விண்ணப்பித்த மகளிர் உரிமைத்தொகை எப்போது வரும் என்று பலத்த எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பதாரர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.எனவே இம்மாதத்திற்கான அதாவது அக்டோபர் மாத உரிமைத்தொகை இன்னும் 13 நாட்களில் அவரவர் வங்கிIக்கணக்கில் செலுத்தப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.