புதுவையில் கருணாநிதி சிலைக்கு அனுமதி கிடையாது! காங் திமுகவை கதறவிடும் கிரண்பேடி

0
240

புதுவையில் கருணாநிதி சிலைக்கு அனுமதி கிடையாது! காங் திமுகவை கதறவிடும் கிரண்பேடி

தமிழக முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமாகிய மறைந்த கலைஞர் கருணாநிதிக்கு புதுச்சேரியில் சிலை அமைக்கப்படும் என்று சட்டசபையில் புதுவை மாநில முதலமைச்சர் திரு.நாராயணசாமி அறிவித்தார்.

கருணாநிதிக்கு சிலை அமைக்க முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து கட்சி முக்கிய பிரமுகர்கள் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி சிலை அமைய உள்ள இடம், சிலை வடிவமைப்பு ஆகியவை குறித்து கூடி முடிவு செய்யும். ஆனால், இந்த கமிட்டியின் கூட்டம் இதுவரை நடை பெறவில்லை. வெறும் வெற்று அறிவிப்பாக மட்டும் இன்றளவில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அவர்கள் புதுவை அரசுக்கு சொந்தமான இடத்தில் கலைஞர் கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதி தர முடியாது என்று அதிரடியாக அறிவித்துள்ளார்,. இதனால் அம்மாநில காங்கிரஸ் அரசு கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் திமுகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது.

ஏற்கனவே அம்மாநில துணை ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையே அதிகார மோதல் இருந்து வருவதால், கலைஞர் சிலைக்கு அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளது அம்மாநில திமுகவினரை மட்டும் இல்லாமல் தமிழகம் முழுவதும் திமுகவினரிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

இதற்கு மத்திய பாஜக அரசு பின்னாலிருந்து செயல்படுவதாக திமுக உடன் பிறப்புகள் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர் மேலும் கிரண்பேடிக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கவும் தயாராகி வருகின்றனர்.

Previous articleஅரசியல் ரீதியில் கமல்-ரஜினி இணைப்பு சாத்தியமா?
Next articleஉலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டத்தில் வாழ்வா? சாவா? நிலையில் இந்தியா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here