கலைஞரின் 98 ஆவது பிறந்த நாள்! உதயநிதியின் உணர்ச்சி மிகுந்த பதிவு!

0
127

மறைந்த முன்னாள் திமுக தலைவரும் முன்னாள் அமைச்சருமான கருணாநிதியின் 98வது பிறந்தநாளை கொண்டாட படுகிறது என்று திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டசபை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பெரியாரின் பகுத்தறிவு தமிழ்நாடு தந்த அண்ணாவின் மாநில சுயாட்சி இவற்றை பாதுகாத்து இந்திய ஒன்றிய மாநிலத்திற்கு வழிகாட்டும் அரசனாக நம்முடைய முத்தமிழ் அறிஞரின் 98வது பிறந்த நாளில் அவர் வழியில் தலைவர் ஸ்டாலின் அவர்கள் கரத்தை வலுப்படுத்துவோம் என்று பதிவிட்டிருக்கிறார்

 

https://twitter.com/Udhaystalin/status/1400304125829550082?s=20

அவர் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவில் நவீன தமிழ் நாட்டின் தந்தை முத்தமிழறிஞர் கலைஞரின் 98-வது பிறந்த நாளில் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அமைச்சர்கள் கழக நிர்வாகிகளுடன் கலைஞரின் ஓய்விடத்தில் மரியாதை செலுத்தினோம். எளியோர் மேன்மையை அடிநாதமாக வைத்து உழைத்த அவருடைய வழியில் பயணிப்போம் என்று பதிவிட்டிருக்கிறார்.


அதேபோல மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தங்கிய வலைதள பக்கத்தில் அரசியல் செல்வாக்கிற்கு என்னை அழைத்து வந்து செயல் காரணமாக, என்னுடைய முன்னோர்களைப் போல புண்ணியம் செய்ய வைத்த நவீன தமிழ்நாட்டின் சிற்பி பெருமைமிகு தலைவர் கலைஞரின் 98-வது பிறந்த நாளில் நன்றியுடன் வணங்குகிறேன் அவர் சென்ற திசையில் கழகம் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் அரசும் எப்போதும் பயணம் செய்து கொண்டிருக்கிறார்.

திராவிடர் முன்னேற்ற கழகத்தின் வழக்கறிஞர் அணியை சார்ந்த தமிழன் பிரசன்னா தங்களை தெரிந்துகொள்ள இவர்களுக்கு இந்த பிறவி போதாது. உங்களை எதிர்ப்பவர்களின் வேர்களுக்கும் நீர் ஊற்றி வளர்த்தீர்கள் பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா என பதிவிட்டிருக்கிறார்.

Previous articleபயனர்களை வாட்ஸ் அப்! கட்டாயப்படுத்துகிறது ! டெல்லி அரசு !
Next articleதமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை