இதை பண்ணிகொடுங்கனு இவரை கெஞ்சிய கலைஞர்!

0
171
#image_title

பூம்புகார் திரைப்படம் 1964ஆம் ஆண்டு கலைஞர் மு கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதி பா நீலகண்டன் இயக்கிய திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் கே பி சுந்தராம்பாள் தான் இந்த வேடத்தில் நடிக்க வேண்டும் என கலைஞர் உறுதியாக இருந்தாராம்.

 

அதில் கேபி சுந்தராம்பாள் நான் ஒரு சில வரிகள் ஒரு சில திருத்தம் செய்ய மறுத்த பொழுது அதற்கெல்லாம் வளைந்து கொடுத்து அவருக்கு ஏற்ற மாதிரி திரைக்கதை வசனத்தை மாற்றி எழுதினாராம் கலைஞர்.

 

இந்தப் படத்தில் கே பி சுந்தராம்பாள் கவுந்தியடிகளாக நடித்திருப்பார். இந்த கவிந்தியடிகள் ஒரு சமண துறவி. இந்த சமண துறவி நெற்றியில் பட்டை போட மாட்டார்.

ஆனால் கே பி சுந்தராம்பாளோ முருகனின் தீவிர பக்தை. அவரால் பட்டை போடாமல் இருக்க முடியாது. பட்டை போடாமல் எந்த ஒரு படத்திலும் அவர் நடித்ததில்லை. அதனால் மெல்லியதாக கூட பட்டை போட்டுக் கொள்கிறேன். பட்டை போடாமல் நான் நடிக்க மாட்டேன் என்று கே பி சுந்தராம்பாள் சொல்ல கருணாநிதி அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

 

பிறகு கோவலனிடம் கவுந்தியடிகள் ஒரு உரையாடலின் பொழுது அன்று கொல்லும் அரசின் ஆணை.. என்ற பாடலில் “நின்று கொல்லும் தெய்வம் எங்கே சென்று விட்டது” எனக் கவிஞர் மாயவநாதன் எழுதியிருந்தார்.

 

அந்த வரிகளை கேட்டு சுந்தராம்பாள் பாடம் மறுத்து விட்டாராம். ஏனென்றால் அவரோ ஒரு தெய்வ நம்பிக்கை உடையவர். கலைஞரோ தெய்வ நம்பிக்கையற்றவர். மூடநம்பிக்கையை வெறுப்பவர். இப்படி இருக்கும் பொழுது அந்த பாடலை கொல்லும் தெய்வம் எங்கே சென்று விட்டது என்ற பாடல் வரியை அவர் பாட மறுத்துவிட்டாரா.

 

அப்பொழுது மாயவநாதன் ஊருக்கு சென்றிருக்க, இதனை மு கருணாநிதி அவர்கள் அந்த பாடலையே மாற்றி எழுதி தந்தாராம் “நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது” என மாற்றி எழுதிக்கொடுத்தாராம்.

 

இப்படி இந்த கேரக்டருக்கு இவர்தான் கரெக்டாக இருப்பார் என்று மு கருணாநிதி தேர்வு செய்த பொழுது, அவர் நடிக்க மறுத்த சில காட்சிகளில் அவருக்காகவே மாற்றப்பட்ட வசனங்களும் உண்டு, அந்த அளவுக்கு தனது நடிப்பால் அவர் கே பி சுந்தராம்பாள் அவர்கள் கட்டி போட்டு இருந்தார் என்றே சொல்லலாம்.

 

 

author avatar
Kowsalya