பழைய படங்களை ‘ரீ ரிலீஸ்’ செய்து கல்லா கட்டும் திரையரங்கு உரிமையாளர்கள் !
கொரானா நோய்தொற்று காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் பெரும் வீழ்ச்சியைக் கண்டனர். இந்நிலையில் இந்த ஆண்டு பொங்கலன்று விஜய் நடிப்பில் ரிலீஸ் ஆன மாஸ்டர் திரைப்படம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் பெருமளவு லாபத்தை எட்டியது.
பிறகு எந்த படங்களும் திரையரங்குகளில் வராத நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் மீண்டும் வீழ்ச்சியை கண்டனர். இதைத்தொடர்ந்து சில வருடங்களுக்கு முன்பு கார்த்தியின் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களுக்கிடையே பெரும் வரவற்பைப் பெற்றது. இந்நிலையில் கடந்த வாரம் அஜித் குமார் நடிப்பில் உருவான பில்லா திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. கடந்த மூன்று வருடங்களாக அஜித் குமாரின் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகாதா நிலையில் சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு இந்த ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படம் அஜித் குமாரின் ரசிகர்களுக்கு வேறலெவல் மகிழ்ச்சியை அளித்தது.
இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். திரையரங்குகளில் வழக்கத்தை விட அதிகமாகவே கூட்டம் குவிந்தது எனத் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்தது மட்டுமில்லாமல் செம்ம கலெக்சன் செய்தனர். இதைனையொட்டி இதுபோன்று பல ப்ளாக் பஸ்டர்ப் படங்களை ரீ ரிலீஸ் செய்து கல்லா கட்டும் முடிவில் திரையரங்க உரிமையாளர்கள் உள்ளனர் .