State

சாதி மறுப்பு திருமணம்! காதலியை கரம் பிடித்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.!!

கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபு தனது காதலி சௌந்தர்யாவை இன்று காலை திருமணம் செய்து கொண்டார்.

கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2016ம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பிரபு (வயது 34). இவர் தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சௌந்தர்யா என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவிற்கும் காதலி சௌந்தர்யாவிற்கும் இன்று திடீர் திருமணம் நடைபெற்றது. இது ஒரு ஜாதி மறுப்புத் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

தியாகதுருகத்தில் உள்ள அவரது இல்லத்தில் எம்.எல்.ஏ.வின் பெற்றோர்கள் தலைமையில் இந்த சாதி மறுப்பு திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்தது. இதையடுத்து, எம்.எல்.ஏ. பிரபு – சௌந்தர்யா தம்பதிக்கு அதிமுக நிர்வாகிகள் பலரும் திருமண வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். விரைவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்தித்து தங்கள் திருமணத்திற்கு வாழ்த்துகளைப் பெற உள்ளதாக எம்.எல்.ஏ. பிரபு கூறினார்.

சாதி மறுத்து திருமணம் செய்து கொள்பவர்களை ஆணவக் கொலை செய்யும் இந்த காலகட்டத்தில், ஒரு சட்டமன்ற உறுப்பினரே முன்மாதிரியாக இதுபோல ஒரு சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டு இருப்பது பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

Leave a Comment