கள்ளக்குறிச்சி அடுத்து சேலம்.. அலறும் மரண ஓலை!! டோர் டெலிவரியில் கள்ளச்சாராயம்!!

0
517
Kallakurichi followed by Salem.. Screaming death leaf!! Counterfeit Liquor on Door Delivery!!
Kallakurichi followed by Salem.. Screaming death leaf!! Counterfeit Liquor on Door Delivery!!

 

கள்ளக்குறிச்சி அடுத்து சேலம்.. அலறும் மரண ஓலை!! டோர் டெலிவரியில் கள்ளச்சாராயம்!!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரமானது பூதாகரமாக வெடிக்க தொடங்கியுள்ளது.நேற்று முதல் தற்போது வரை கிட்டத்தட்ட 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக பதிவாகியுள்ளது.அதுமட்டுமின்றி பலரும் மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று அவர்களின் நிலை கவலைக்கிடாமகவே உள்ளது.இதற்கு முழு பொறுப்பு ஆளும் கட்சி தான் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இதற்கு பதிலளிக்க முடியாமல் தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதாக தெரிவித்துள்ளது.

கடந்த ஆட்சி முறையை காட்டிலும் இம்முறை போதைப்பொருள் அதிகளவில் ஊடுருவி விட்டது.இது மறுக்கப்படாத ஒன்று.குறிப்பாக இளைஞர்கள் அதிகப்படியானோர் இந்த கஞ்சா உள்ளிட்டவைகளுக்கு அடிமையாகியுள்ளது கவலையளிக்கும் விதமாக உள்ளது.அந்த வகையில் தற்பொழுது இந்த கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தது குறித்து தமிழக அரசு தனி ஆணையம் அமைத்தும் விசாரணை செய்து வருகிறது.இந்நிலையில் சேலத்தில், சொல்லும் இடத்திற்கே சென்று பாக்கெட் களில் கள்ளச்சாராயம் விற்கும் வீடியோவானது தற்பொழுது வைரலாகி வருகிறது.

இது பலரது  பார்வைக்கும் சென்றுள்ளதை அடுத்து இது குறித்து பரபரப்பாக பேசப்பட்டும் வருகிறது.மேற்கொண்டு எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமலிருக்க இது போல நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.அதுமட்டுமின்றி சேலத்தில் கள்ளச்சாராயத்தை பாக்கெட்களில் அடைத்து டோர் டெலிவரியே செய்யும் இந்த வீடியோவானது எப்பொழுது எடுக்கப்பட்டது என்ற தகவல்கள் ஏதும் இல்லை.

இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கும்படி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.உடனடி நடவடிக்கைகள் மூலம் பல உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Previous articleTVK vs DMK: திமுக-வுக்கு செட் ஆகாத விஜய்.. ஒரே போஸ்ட் வாயடைத்து போன ஸ்டாலின்!!   
Next articleTNPSC GROUP 2 & 2A 2024: நோட் பண்ணிக்கோங்க.. 2030 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு தேதி வெளியீடு!!