கள்ளக்குறிச்சி போராட்டம் நீதிமன்றத்தில் இன்று விசாரணை! நீதிபதியின் உத்தரவு!
கள்ளக்குறிச்சி தாலுக்கா சின்னசேலம் அடுத்த கணியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிலஸ் 2 மாணவி உயிரிழந்த விவகாரத்தில் அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி சதீஷ்குமார் முன்பு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா ஆஜராகி முதல்வளக்காக விசாரிக்க கோரிக்கை விடுத்தனர்.
மேலும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன் என்றும் நீதிபதி சதீஷ்குமார் கேள்வி எழுப்பினார்.மர்மமான முறையில் பிளஸ் டூ மாணவி இறந்த சம்பவம் நேற்று வன்முறையாக வெடித்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்தப் போராட்டத்திற்கு அனுமதி வழங்கியது யார் என்றும் அங்கு படித்து வரும் எல்கேஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் டிசி போன்ற சான்றிதழ் எரிக்க யார் உரிமை கொடுத்தது எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும் அரசானது யாரையும் பாதுகாக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை என்று தெரிவித்தது. மேலும் தனி படை அமைத்து போலீசார் விசாரணையை நீதிமன்றம் கண்காணித்து வரும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
மேலும் போலீசார் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை என்றும் நீதிபதி கூறினார். மேலும் வெளிநாட்டில் இருந்து அந்த மாணவியின் தந்தை 17ஆம் தேதி தான் வந்தார் எனவும் வன்முறையில் பெற்றோருக்கு தொடர்பில்லை என்ற மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.
மேலும் வன்முறையின் பின்னால் இருப்பவர் யார் என்பதை சிறப்பு படையை அமைத்து கண்டுபிடிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கானது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
மேலும் மனுதாரர் தரப்பில் மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் தகுதியில்லாத மருத்துவர்கள் கொண்டு இந்த சோதனை நடத்தப்பட்டது எனவும் கூறுகின்றார்கள்.
மேலும் இறுதி முடிவாக வன்முறை சம்பவம் குறித்து சிறப்பு படை அமைத்து விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் டிஜிபி க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.