அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும் துணை முதல்வராகவும் இருக்கின்ற ஓ பன்னீர்செல்வம் நாள்தோறும் கட்சியுடைய மாவட்டச் செயலாளர்களுக்கு போன் செய்து பேசுகின்றார் அப்போது அந்தந்த பகுதிகளில் சட்டசபைத் தொகுதிகளின் நிலவரம் பற்றி விசாரணை செய்கின்றார் அவ்வாறு பேசும்போது மூன்றாவது முறையாக ஜெயலலிதா ஆட்சி அமைக்க வேண்டும் அதற்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என அனைவரும் விரோதப் போக்கை மறந்து ஒன்றிணைந்து செயல்படவேண்டும் களத்தில் நாம் இணைந்து நின்றால் திமுகவை எளிதாக வென்று விடலாம் என்று எழுதியிருக்கின்றார்.
அதேபோல ஒவ்வொரு தொகுதியிலும் கட்சியில் செல்வாக்கு இருப்பவர்கள் யார் திமுகவில் சீட் கேட்பவர்களின் பலம் மற்றும் பலவீனம் என்ன என்பதை விசாரித்து வருகின்றாராம். திண்டுக்கல் சீனிவாசன் அமைச்சர் பாஸ்கர் ஆகியோருடைய செயல்பாடுகள் திருப்தி அளிக்காத காரணத்தால் அவர்களுடைய மகன்கள் அந்த தொகுதியில் சில விரும்பத்தகாத செயல்களை செய்து கோடி கோடியாக பணம் சம்பாதித்து அந்த தொகுதியில் கட்சியின் பெயரை கெடுத்து விட்டார்கள் இந்த நிலையில் இருவரும் தங்களுடைய மகன்களுக்கு சீட்டு கேட்டு தலைமையை நச்சரிக்க தொடங்கியிருக்கிறார்கள்.
ஆனால் இந்த இரு அமைச்சர்களுக்கும் சீட்டு கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான் இதில் அவர்களுடைய வாரிசுகளுக்கு வேறு கேட்பதால் தலைமை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது தென் மாவட்டங்களை பொருத்தவரை இந்த இரு அமைச்சர்களுக்கும் இந்த முறை டேக்கா கொடுப்பது நிச்சயம் என்று சொல்கிறார்கள் அதிமுக தலைமையில் இருக்கின்ற நிர்வாகிகள் இந்த முறை தயவு தாட்சண்யம் பார்க்காமல் நின்றால் வெற்றிபெற கூடியவர்களுக்கு சீட் கொடுக்க வேண்டும் என்று அதிமுகவின் தலைமை முடிவெடுத்து இருக்கின்றது அமைச்சர்கள் என்ற முறையில் சீட் வழங்கிவிட இயலாது. இந்தத் தேர்தல் அதிமுகவிற்கு வாழ்வா அல்லது சாவா என்ற போராட்டம் என்ற காரணத்தால் முதல்வரும் துணை முதல்வரும் வேட்பாளர்கள் விஷயத்தில் கடுமை காட்டுவதற்கு முடிவெடுத்திருப்பதாக தெரிவிக்கிறார்கள்.