கல்யாணராமன் கைது விவகாரம்! தமிழக அரசை மிரட்டிய பாஜக தலைமை!

Photo of author

By Sakthi

சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இருக்கின்ற கல்யாணராமன் அவர்களை ஜாமினில் எடுப்பதற்காக வழக்கறிஞர்கள் போனபோது கடந்த 2018ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை என இன்று புதிதாக 5 முதல் தகவல் அறிக்கையை நீதிபதியிடம் காவல்துறையினர் கொடுத்திருக்கிறார்கள். இந்த முதல் தகவல் அறிக்கையின் கீழ் கல்யாண ராமனை இன்னும் கைது செய்யாமல் உள்ளோம், என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்யாணராமன் கைது செய்து இருப்பதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. இதுபோன்ற நடவடிக்கையை பாஜக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என காட்டமாக தெரிவித்துள்ளார் அண்ணாமலை.

அவரை குண்டர் சட்டத்தில் முன்னரே கைது செய்து தற்போது தான் விடுதலையாகி உள்ளார், இந்த வழக்குகள் அனைத்தும் குண்டர் சட்டம் போடுவதற்கு முன்பாகவே இருக்கின்ற வழக்குகள் ஆகும், நீதிபதியிடம் ஜாமீன் கொடுக்க முன்வரும் சமயத்தில் புதிதாக 5 முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர் . இதைப் போன்ற செயலை நாங்கள் பார்த்துக்கொண்டு இருப்போம் என திமுகவின் ஆட்சியாளர்கள் நினைத்தால் விளைவுகள் வேறு மாதிரியாக இருக்கும். கல்யாணராமன் தயவு செய்து இருப்பதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது காவல்துறை ஆளும் கட்சியின் ஏவல் துறையாக இருக்கக்கூடாது என அண்ணாமலை விமர்சனம் செய்திருக்கிறார்.