இந்தியன் 2 விபத்து: பலியானவர்களுக்கு ரூ.1 கோடி கொடுக்கும் கமல்!

Photo of author

By CineDesk

இந்தியன் 2 விபத்து: பலியானவர்களுக்கு ரூ.1 கோடி கொடுக்கும் கமல்!

CineDesk

கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படத்தின் நேற்று படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் ஷங்கரின் உதவியாளர் உள்பட மூன்று பேர் பரிதாபமாக பலியான சம்பவத்தால் படக்குழுவினர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் கமல்ஹாசன் மற்றும் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ஆகிய இருவரும் சற்றுமுன் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் விபத்தில் பலியானவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்த சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு வந்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் பேசியதாவது:

’இந்தியன் 2’ படப்பிடிப்பில் நடந்த விபத்தை எனது குடும்பத்தில் நடந்ததாகவே நான் கருதுகிறேன். சினிமா துறையில் போதிய பாதுகாப்பு இல்லை என்பதையே இது காட்டுகிறது. படப்பிடிப்பு தளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு ரூபாய் நிதி ஒரு கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்றும் கமலஹாசன் தெரிவித்தார்.

இனிமேல் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் கடைநிலை ஊழியர்களுக்கும் பாதுகாப்பு மற்றும் இன்சூரன்ஸ் இருக்கும் வகையில் படத்தயாரிப்பு குழுவினர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைப்பதாகவும் கமல் கேட்டுக்கொண்டார்