கமலஹாசன் மீதும் கதை திருட்டு குற்றச்சாட்டு!! தேவர்மகன் கதை திருடப்பட்டதா!!

Photo of author

By Gayathri

கமலஹாசனின் சினிமா துறையில் மிக முக்கிய படமாக கருதப்படும் தேவர் மகன் திரைப்படம் கதைத் திருட்டு செய்யப்பட்ட படம் என்ற குற்றச்சாட்டு இன்றளவும் கூறப்பட்டு வருகிறது. 1992 ஆம் ஆண்டு இயக்குனர் பரதன் இப்படத்தினை இயக்கி வெளியிட்டுள்ளார். மேலும் இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்படி படத்தின் கதையோட்டமானது, மிகவும் அழுத்தமான தென் மாவட்டங்களில் நிலவும் சாதிய சமூக நிலைமையை எடுத்துக் கூறுவதாக இப்படம் அமைந்திருப்பது அனைவருக்கும் தெரிந்தது.

குறிப்பாக இப்படத்தின் கதை திரைக்கதை மற்றும் வசனம் ஆகியவற்றை கமலஹாசன் அவர்களே எழுதி இருந்தார். இப்பொழுது படங்களை இயக்கம் இயக்குனர்கள் இந்த படத்தினை ஒரு முன்னுதாரணமாக வைத்தே படங்களை இயக்கி வருகின்றனர். அந்த அளவிற்கு கதை கருத்தை கொண்ட இப்படம் கமலஹாசன் உடைய கதையே இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது.

தேவர்மகன் படத்திற்கு முன்னர் கமலஹாசன் நடிப்பில் வெளியான குணா திரைப்படம் வெற்றி பெறாத காரணத்தால் வெற்றியடைய கூடிய மற்றொரு படத்தை கொடுக்க வேண்டும் என முடிவு செய்த கமலஹாசன் அவர்கள், கங்கை அமரன் இடம் கதை கேட்டுள்ளார். அந்த கதை தான் தேவர் மகன் எனவும் அதற்கு அவர் அதிவீரபாண்டியன் என பெயர் வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இப்படி இருக்கையில், இந்தப் படத்திற்கான கதை கதாசிரியர் கலைஞானம் அவர்களுடையது என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு தேவர் மகன் படத்தின் கதை என்னுடையது என இப்படத்தை எடுத்து முடித்த பின்பு கலை ஞானத்திடம் உங்களுடைய தம்பி இந்த படத்தை எடுத்துக் கொள்கிறாராம் என ஒருவர் வந்து தெரிவித்து இருந்ததாகவும் இவர் சமூக ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

மேலும் இந்த கதைக்கு கமலஹாசன் அவர்கள் அதிக பணம் தருவதாக கூறி வெறும் 20 ரூபாய் நோட்டுகளை கொண்ட 25 ஆயிரம் மட்டுமே தனக்கு கொடுத்ததாகவும் கதாசிரியர் கலை ஞானம் தெரிவித்திருக்கிறார்.