லியோ படத்தில் நடிக்கும் கமல்ஹாசன்? லோகேஷ் கனகராஜ் முடிவில் மாற்றமா?

Photo of author

By Parthipan K

லியோ படத்தில் நடிக்கும் கமல்ஹாசன்? லோகேஷ் கனகராஜ் முடிவில் மாற்றமா?

Parthipan K

Kamal Haasan acting in Leo? Is Lokesh Kanagaraj a change in decision?

லியோ படத்தில் நடிக்கும் கமல்ஹாசன்? லோகேஷ் கனகராஜ் முடிவில் மாற்றமா?

தமிழ் சினிமாவில் அதிகளவு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர்களின் ஒருவராக இருப்பவர் விஜய். இவர் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த மாதம் 11ஆம் தேதி வெளியாகியது. அதனைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகின்றது.

இந்த படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியான நாளிலிருந்து இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த படமானது மாபெரும் பொருட்செலவில்  உருவாகி வருகிறது. மேலும் இந்த படத்தில் விஜயுடன் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

மேலும் இயக்குனர் மிஷ்கின் தன்னுடைய காட்சிகளை எடுத்து முடித்து விட்டதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் லோகேஷ் கனகராஜ் எல் சி யு வில் வருமா என்று பலரும் கேட்டு வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து இந்த லியோ படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கிறாரா என கேள்வி எழுந்துள்ளது. ஆனால் லியோ படத்தில் கமலஹாசன் நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் முடிவு எடுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மேலும்  கமல் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு இல்லை ஆனால் லோகேஷ் கனகராஜ் விரைவில் இந்த முடிவை மாற்றி கமலை  நடிக்க வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.