இத்தனை நாளா எங்கே போயிருந்தீங்க மிஸ்டர் கமல்?

0
137

நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தேர்தல் நெருங்கி வருவதால் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி வருகிறார்.அவர் கட்சி தொடங்கி பிரச்சாரத்தை ஆரம்பித்ததிலிருந்து ஊழலுக்கு எதிராக நான் செயல்படுவேன் என்ற கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அதோடு இது தரையில் தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த கட்சிகள் எதுவுமே தமிழகத்திற்கு எந்த ஒரு நல்ல விஷயத்தையும் செய்யவில்லை தமிழகம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது என்பது போன்ற கருத்துக்களை தெரிவித்து வந்தார்.

அதேபோல முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களையும் கடுமையாக விமர்சனம் செய்தார் கமல்ஹாசன். அதோடு அவர் கடவுள் நம்பிக்கை அற்றவர் என்ற காரணத்தால், அந்த கொள்கையை வைத்து தன் பக்கம் அவரை இழுத்து விடலாம் என்று எதிர்கட்சியான திமுக கணக்குப் போட்டுப் பார்த்தது. ஆனால் அந்த கணக்கு பலிக்கவில்லை.
இது ஒருபுறமிருக்க இப்பொழுது வந்து ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் கமல்ஹாசன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த சமயத்திலேயே எதற்காக அரசியலில் இறங்கவில்லை என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

அதற்கு அவர் என்ன பதில் தெரிவித்தாலும் மக்கள் அதனை ஏற்றுக் கொள்வதாக தெரியவில்லை. ஒருவேளை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த சமயத்தில் ரஜினியோ அல்லது கமலோ கட்சியை தொடங்கி இருந்தால் நிச்சயமாக அவர்கள் வீட்டை விட்டே வெளியே வந்திருக்க முடியாது என்று சொல்கிறார்கள்.ஆனால் இப்பொழுது தமிழகத்தில் இருந்த மாபெரும் சக்திகள் யாவும் இல்லாமல் போய்விட்டதன் காரணமாக தனக்கு பெரிய எதிர்ப்பு இல்லை என்பதை தெரிந்து கொண்டு கமல்ஹாசன் கட்சி தொடங்கி இருக்கிறார் என்று தெரிவிக்கிறார்கள்.

அவர் மதுரை அவனியாபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட சமயத்தில் ஊழல் கட்சி ஆட்சி செய்து கொண்டிருக்கிறது அதற்கு மாற்றாக மற்றொரு ஊழல் கட்சி வரமுடியாது. அதற்கு மாற்றாக நேர்மையான கட்சிதான் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். எங்கள் கட்சியின் வெற்றிக்கான காரணம் என்னவென்பது கட்சி பெயரில் இருக்கிறது அதனை மக்கள் தான் தூக்கி பிடித்து இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

அதோடு இப்பொழுது வந்து வாய்கிழிய பேசும் கமல்ஹாசன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த சமயத்திலேயே இந்த வார்த்தையை தெரிவித்து இருக்கலாமே அப்போதெல்லாம் இவர் எங்கே சென்று இருந்தார் என்பது போன்ற கருத்துக்கள் தமிழகம் முழுவதிலும் பரவத் தொடங்கி இருக்கிறது. இதனால் கமல்ஹாசன் சற்று அதிர்ச்சி அடைந்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

Previous articleபிக் பாஸ் சீசன் ஐந்து எப்போது தொடங்குகிறது தெரியுமா!
Next articleமீண்டும் தீவிர வறுமைக்கு தள்ளப்படும் மக்கள்! ஆய்வறிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!