கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில்! இது தேவையா? மோடியை கடுமையாக விமர்சிக்கும் கமல்ஹாசன்

0
148
Kamal Haasan Criticise New Parliament Building
Kamal Haasan Criticise New Parliament Building

கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில்! இது தேவையா? மோடியை கடுமையாக விமர்சிக்கும் கமல்ஹாசன்

தலைநகர் டெல்லியில் அமையவுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் மோடி சமீபத்தில் அடிக்கல் நாட்டினார். இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடமானது சுமார் ரூ.971 கோடி செலவில் தற்போதுள்ள நாடாளுமன்றத்திற்கு அருகில் முக்கோண வடிவத்தில் கட்டப்படுகிறது.

இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடமானது பிரதமர் மோடியின் சுயசார்பு திட்டத்தின் கீழ் 64 ஆயிரத்து 500 சதுர மீட்டரில் அமையவுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் வருகின்ற 2022 ஆண்டில் செயல்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமையவுள்ள இந்த புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் மக்களவையில் 888 இருக்கைகள், மாநிலங்களவையில் 543 இருக்கைகள் என்ற அடிப்படையில் அமைக்கப்படுகின்றன. இந்த புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் எம்பிக்கள் தங்குவதற்கு ஏற்றவாறு ஓய்வறை, மேலும் அனைத்து துறை நிலைக்குழு அலுவலகங்கள் உள்ளிட்டபல்வேறு அம்சங்களுடன் அமைக்கப்படவுள்ளது.

இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டபடுவது குறித்து மக்கள் நீதி மய்ய தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்,அவருடைய அந்த ட்விட்டர் பதிவில் “சீனப்பெருஞ்சுவர் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். மக்களைக் காக்கத்தான் இந்தச் சுவர் என்றார்கள் மன்னர்கள். கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில்,ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க? பதில் சொல்லுங்கள் என் மாண்புமிகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரே…. என்று பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்

Previous articleரத்த குழாய் அடைப்பு நீங்க வியக்கவைக்கும் ஆயுர்வேத மருத்துவம்!
Next articleஇந்த ராசிக்கு இன்று ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வார்கள்! இன்றைய ராசி பலன் 14-12-2020 Today Rasi Palan 14-12-2020