1960 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்பொழுது இந்திய சினிமாவில் முக்கிய நடிகராக விளங்குபவர் நடிகர் கமல்ஹாசன் அவர்கள். சினிமா துறையில் பல வெற்றிகளை கண்டு வருபவர், தனிப்பட்ட வாழ்க்கையில் தோல்விகளை மட்டுமே சந்திப்பதற்கான காரணம் குறித்து கமலினுடைய முதல் மனைவி தெரிவித்திருப்பதை இந்த பதிவில் காண்போம்.
1978 ஆம் ஆண்டு கிளாசிகல் டான்சர் மற்றும் நடிகையான வாணி கணபதி அவர்களை கமலஹாசன் திருமணம் செய்து கொண்டார்.1988 ஆம் ஆண்டில் இவர்கள் இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இதற்கு காரணம் வாணி கணபதியை திருமணம் செய்த கமலஹாசன் அவர்கள் இவரை விட்டுவிட்டு சரிக்காவுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுவே இவர்களுடைய பிரிவிற்கு காரணம்.
இவர்களுடைய விவாகரத்திற்கு பின் பேட்டி ஒன்றில் கமலஹாசன் கூறியிருப்பதாவது :-
வாணி கணபதியுடன் ஏற்பட்ட முறிவினால் திருமணத்தின் மீது இருந்த நம்பிக்கையை முழுவதுமாக இழந்து விட்டதாக கமலஹாசன் தெரிவித்திருக்கிறார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வாணி கணபதி தெரிவித்திருப்பதாவது :-
எனக்கு அந்த திருமணத்தில் மகிழ்ச்சி கிடைக்கவில்லை. குறைந்தபட்சம் எனக்கு கொஞ்சம் கூட மகிழ்ச்சி அளிக்கவில்லை. நான் பொய் சொல்ல மாட்டேன் எனக் கூறியவர், அது மிகவும் கொடுமையானது. எனவே நான் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினேன். அந்த நேரத்தில் நான் திருமணம் என்ற அமைப்பின் மீது நம்பிக்கை இழந்து கொண்டிருந்தேன். நான் எப்பொழுதும் சத்தமாகப் பேசினேன் என தெரிவித்திருக்கிறார்.மேலும் திருமணம் ஆன முதல் நாளிலிருந்து எங்களுக்கு செட் ஆகவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
1988 ஆம் ஆண்டு வாணி கணபதி பிரிந்தவுடன் சரிகாவுடன் திருமணம் செய்து கொண்டிருக்கிறார் கமல் ஹாசன் அவர்கள். இவர்களுக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என இரண்டு மகள்கள் உள்ளனர். சரிகாவுடனும் கமலஹாசனால் திருமண வாழ்க்கையில் தொடர்ந்து வாழ முடியவில்லை. இவர்கள் இருவரும் 2004 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
2015 ஆம் ஆண்டு நேர்காணலில் பேசிய வாணி கணபதி அவர்கள், ” எங்களுடைய விவாகரத்து குறித்து நான் பேச விரும்பவில்லை அது எங்களுடைய தனிப்பட்ட விஷயம் என்று கூறியவர், அவர் ஏன் இப்படி வெறி பிடித்த மனிதன் போல் நடந்து கொள்கிறார் என்ற கேள்வியை முன் வைத்திருப்பது ரசிகர்களிடையே பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பியிருக்கிறது.