கமலஹாசன் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க போகும் டாப் ஹீரோ! வெளிவந்த புதிய தகவல்!
தமிழ் சினிமாவில் தற்போது சூப்பர் ஹிட் இயக்குனராக மாறியிருப்பார் லோகேஷ் கனகராஜ். தற்போது இவர் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றி அடைந்துள்ளது. மேலும் கமலஹாசன் நடிப்பில் உருவான இப்படம் ஒரு கோடடி வசூலை கடந்து சாதனைப்படைத்தது. விக்ரம் படத்திற்கு முன்னர் கமலஹாசன் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பதாக இருந்தது. ஆனால் அப்போது சில காரணங்களால் ரஜினிகாந்த் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதால் அதன் பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து விக்ரம் படம் வெளிவந்தது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மீண்டும் இந்த மாஸ் கூட்டணி அமைய உள்ளதாக சில தகவல்கள் கசிகின்றது. கமல் ராஜ் ,கமல் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் புதிய படத்தில் நடிக்கப்போவதாக தகவல் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை கமலுடன் இணைந்து ரஜினியும் தயாரிக்க உள்ளார் என்று கூறுகின்றனர். மேலும் விரைவில் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.