முன்னாள் முதலமைச்சருக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்த கமலஹாசன்!!

Photo of author

By Gayathri

முன்னாள் முதலமைச்சர் மற்றும் நடிகை ஜெயலலிதா அவர்களுக்கு கமலஹாசன் அவர்கள் டான்ஸ் மாஸ்டராக வேலை பார்த்துள்ளார். இதனைப் பற்றிய சுவாரசியமான தகவலை தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

சிறுவயதிலிருந்தே கலையின் மீது கொண்ட ஆர்வம் கமலஹாசனை இன்று 70 வயதிலும் புதிய புதிய பரிமாணங்களை எடுக்க தூண்டி கொண்டிருக்கிறது. இவர் தன்னுடைய சிறுவயதிலிருந்தே பல படங்களில் நடித்துள்ளார்.

நடுவில் சில காலம் டான்ஸ் மாஸ்டர் ஆகவும் வேலை பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஜெயலலிதாவுக்கு அன்புத்தங்கை படத்தில், எம்ஜியாருக்கு நான் ஏன் பிறந்தேன், சிவாஜிக்கு சவாலே சமாளி போன்ற டான்ஸ் மாஸ்டராக வேலை பார்த்துள்ளார்.

மேலும், தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் சிவாலயா என்ற நடன குழுவையும் இவர் நடத்தி வந்துள்ளார். அதன் பின்னர் தான் தங்கப்பனிடம் உதவி நடன இயக்குனராக வேலை பார்த்துள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது.

மேலும் இவரைப் பற்றி கூற வேண்டும் என்றால் சினிமா துறையில் உள்ள அனைத்து பாகங்களையும் தனித்தனியே தன்னகத்தே கொண்டவராக விளங்குபவர் என்றும் கூட கூறலாம். ஏனெனில் இவர் சினிமா துறைக்கு செய்தது பல உண்டு.

அப்படிப்பட்ட இவர், பிலிம்பேர் விருதை 18 முறைக்கு மேல் வாங்கிய ஒரே இந்திய நடிகர் என்ற பெருமை கமல்ஹாசனுக்கே சேரும். அதே போல், ‘உனக்குள்ள நடமாடிக்கிட்டு இருக்குற மிருகம்தான் எனக்குள்ள தூங்கிக்கிட்டு இருக்கு’, ‘போங்கடா… போய் புள்ள குட்டிங்களைப் படிக்க வைங்கடா’, ‘வீரம்னா என்ன தெரியுமா..? பயம் இல்லாதது மாதிரி நடிக்கிறது’, ‘ஓநாயா இருந்து பார்த்தாதான் அதோட நியாயம் என்னான்னு தெரியும்’, ‘சந்தோஷம்னா என்னன்னு அதை அனுபவிக்கும்போது யாருக்கும் தெரியுறதில்லை’, ‘மன்னிக்கிறவன் மனுஷன்,மன்னிப்புக் கேட்கிறவன் பெரிய மனுஷன்’ போன்ற புகழ் பெற்ற வசனத்தை எழுதியவர் வசனகர்த்தா கமல் ஹாசன். இப்படி பல பெருமைகள் இவரையே சாரும்.