கமல்ஹாசன் உடல்நலம் குறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கை

Photo of author

By CineDesk

கமல்ஹாசன் உடல்நலம் குறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கை

நடிகர் கமல்ஹாசன் அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தனது வீட்டில் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்ததால் கால் எலும்பு முறிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

அவரது காலில் ஏற்பட்ட எலும்பு முறிவை சரிசெய்வதற்காக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் எலும்பு இணைவதற்காக ஒரு பிளேட்டை வைத்து இருந்தனர்

இந்த நிலையில் அறுவை சிகிச்சை முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அந்த பிளேட்டை எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்ததால் அவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது கமல்ஹாசனின் காலில் வைக்கப்பட்டிருந்த பிளேட் எடுக்கப்பட்டு அவர் பூரண நலத்துடன் இருப்பதால் அவர் நேற்று மாலை வீடு திரும்பினார்

இது குறித்து மக்கள் நீதி மையம் கட்சியின் துணைத்தலைவர் டாக்டர் மகேந்திரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நமது தலைவர் கமலஹாசன் அவர்கள் அறுவை சிகிச்சை மூலமாக முடிந்து மருத்துவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப மருத்துவமனையில் இருந்து தமது இல்லம் திரும்புகிறார்.

மருத்துவமனை நிர்வாகத்திற்கும், சிறப்புடன் மருத்துவம் பார்த்த மருத்துவர்களுக்கும், உதவியாளர்களுக்கும், ஏனைய பணியாளர்களுக்கும், அத்துடன் நம்மவர் அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று வாழ்த்திய நல் உள்ளங்களுக்கும் மக்கள் நீதி மையம் கட்சி சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்’

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.