3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல்… வைரல் புகைப்படம்!

0
208

3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல்… வைரல் புகைப்படம்!

இந்தியன் 2 திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்துக் காரணமாக நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் லைகா ஷங்கர் ஆகியோருக்கு இடையே பிரச்சனை எழுந்து அது நீதிமன்றம் வரை சென்றது. பின்னர் நீதிமன்றத்துக்கு வெளியே சமாதானம் ஏற்பட்டு படம் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் வெளியாகி ஹிட் ஆகியுள்ள நிலையில் மீண்டும் இந்தியன் 2 படம் தொடங்கப்பட உள்ளது. இந்த படத்தை தொடங்குவதில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் ஆர்வமாக உள்ளார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர்கள் விவேக் மற்றும் நெடுமுடி வேணு ஆகியோர் சமீபத்தில் மறைந்து விட்ட நிலையில் அவர்களுக்கு பதில் வேறு நடிகர்கள் நடிப்பார்கள் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் ஷூட்டிங் தொடங்கி 10 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அதில் கமல் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவில்லை. அதையடுத்து இன்று 3 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் இந்தியன் 2 ஷுட்டிங்கில் கலந்துகொண்டுள்ளார். இயக்குனர் ஷங்கரோடு அவர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்காக சமீபத்தில் கமல் மீண்டும் ஒருமுறை இந்தியன் வேடத்தின் மேக்கப் டெஸ்ட் செய்துகொண்டார் என்று தகவல்க வெளியாகின. இப்போது தொடர்ந்து 10 நாட்கள் இந்தியன் 2 ஷூட்டிங்கில் கமல் கலந்துகொள்ள உள்ளார்.

Previous articleநானே வருவேன் படத்தின் சென்ஸார் மற்றும் ரன்னிங் டைம்
Next articleமாமியாரை அடித்து கொலை மிரட்டல் விடுத்த மாப்பிள்ளை! பரபரப்பு சம்பவம்!