ஒரே ஒரு படம்தான்… உச்சம் தொட்ட கமல் சம்பளம்… இந்தியன் 2 வுக்கு இத்தனைக் கோடியா?

0
245

ஒரே ஒரு படம்தான்… உச்சம் தொட்ட கமல் சம்பளம்… இந்தியன் 2 வுக்கு இத்தனைக் கோடியா?

இந்தியன் 2 திரைப்படம் 3 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் தற்போது ஷூட்டிங் தொடங்கியுள்ளது.

இந்தியன் 2 திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்துக் காரணமாக நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் லைகா ஷங்கர் ஆகியோருக்கு இடையே பிரச்சனை எழுந்து அது நீதிமன்றம் வரை சென்றது. பின்னர் நீதிமன்றத்துக்கு வெளியே சமாதானம் ஏற்பட்டு படம் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது.  முதலில் கமல் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவில்லை.சில தினங்களுக்கு முன்னர் தான் கமல் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார்.

3 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் இந்தியன் 2 ஷுட்டிங்கில் கலந்துகொண்டுள்ளார். இயக்குனர் ஷங்கரோடு அவர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்காக சமீபத்தில் கமல் மீண்டும் ஒருமுறை இந்தியன் வேடத்தின் மேக்கப் டெஸ்ட் செய்துகொண்டார் என்று தகவல்க வெளியாகின. இப்போது தொடர்ந்து 10 நாட்கள் இந்தியன் 2 ஷூட்டிங்கில் கமல் கலந்துகொள்ள உள்ளார்.

இந்நிலையில் விக்ரம் படத்தின் அதிரிபுதிரி ஹிட்டான நிலையில் மீண்டும் தொடங்கியுள்ள இந்தியன் 2 படத்துக்காக கமலுக்கு சம்பளம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் கமலுக்கு சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது ஒட்டுமொத்தமாக திரையுலகையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Previous articleஇந்த ஒரு ஆப் இருந்தால்  போதும்! எங்கிருந்து வேண்டுமானாலும் எந்த பகுதிக்கும்  குடிநீர் விநியோகம் செய்யலாம்!
Next articleபொன்னியின் செல்வன் திரைப்படத்தைக் குழந்தைகள் பார்க்கலாமா? வெளியான சென்ஸார் தகவல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here