கமலின் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் இவரா? வெளியான தகவல்!

0
203

கமலின் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் இவரா? வெளியான தகவல்!

கமல்ஹாசன் இயக்கத்தில் அடுத்து உருவாகும் படத்தை மகேஷ் நாராயணன் இயக்க உள்ளார்.

ஜூன் 3 ஆம் தேதி ‘விக்ரம்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது.  கமலுடன் விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்த விக்ரம் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைத்திருந்தார். வெளியானது முதல் இப்போது வரை வெற்றிகரமாக ஓடிவரும் விக்ரம் திரைப்படம் இதுவரை 450 கோடி ரூபாய்க்கும் மேல் வெற்றிகரமாக திரையரங்குகள் மூலம் வருவாய் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 170 கோடி ரூபாய்க்கு மேல் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை தமிழகத்தில் எந்தவொரு படமும் படைக்காத வசூல் சாதனை இது.

இதையடுத்து கமல் நடிக்கும் அடுத்தபடத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. அடுத்த படத்தை மலையாள இயக்குனரும் எடிட்டருமான மகேஷ் நாராயணன் இயக்க உள்ளார் என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இந்த திரைப்படம் தேவர் மகன் 2 வாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்கு இசையமைப்பாளராக மலையாளத்தில் பிஸியாக படங்களில் பணியாற்றி வரும் சுஷின் ஷ்யாம் இசையமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.  இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Previous articleஆகஸ்ட் 3 முதல் அரசு பேருந்துகளில் பார்சல் அனுப்பும் வசதி… போக்குவரத்துத் துறை அறிவிப்பு
Next articleகோவையில் வேகமாக படையெடுக்கும் டெங்கு காய்ச்சல்? பீதியில் பொதுமக்கள்!!.