தமிழ்நாட்டில் கமல் எதிர்ப்பு! புதுச்சேரியில் கவுதமி ஆதரிப்பு! சபாஸ் சரியான போட்டி!

0
90
Kamal protests in Tamil Nadu! Gautami support in Puducherry! Sabas is the perfect match!
Kamal protests in Tamil Nadu! Gautami support in Puducherry! Sabas is the perfect match!

தமிழ்நாட்டில் கமல் எதிர்ப்பு! புதுச்சேரியில் கவுதமி ஆதரிப்பு! சபாஸ் சரியான போட்டி!

இந்த ஆண்டு பட்ஜெட் தாக்குதலை நிர்மலா சீத்தாராமன் வெளியிட்டார்.இதில் தாறுமாறாக பெட்ரோல் டீசலின் விலை உயர்ந்துள்ளது.இந்த உயர்வைக் கண்டு மக்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.இந்நிலையில் தங்கத்தின் விலையை குறைத்தனர்.ஓராண்டு  காலமாக மக்கள் வேலையின்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.

இதனைத்தொடர்ந்து அவர்களது கையில் சேமிப்பு பணம் என்று ஏதும் இல்லை.அப்போது பாமர மக்கள் எப்படி சென்று தங்கம் வாங்குவார்கள்.இந்த கொரோனா தொற்று காலத்தில் அவர்கள் ஓர் நாள் வாழ்க்கையை நடத்தவே பெரும் சிரமமாக உள்ள நேரத்தில் மக்கள் அனைவரும் இந்த ஆண்டு பட்ஜெட் தாக்குதல் ஆனது குறைந்து காணப்படும் என எதிர்பார்த்தனர்.அவர்கள் எதிர்பார்த்ததிற்கு மாற்றாக இந்த ஆண்டு பட்ஜெட் தாக்குதல் அதிகமா காணப்பட்டது.

மேலும் சட்டமன்ற தேர்தல் புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் மக்களிடம் வாக்குகளை பெறுவதற்கு பலவித அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.அந்தவகையில் புதுச்சேரி பாஜக கூட்டணி கட்சிக்கு நடிகை கவுதமி ஆதரவு தந்து வருகிறார்.அப்போது மக்களிடம் வாக்குகளை சேகரிக்க பிரச்சாரம் மேற்கொள்ளும்  போது  அவர் கூறியது,வரும் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனாயக கட்சி அமோக வெற்றி பெரும் என்பதில் முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன்.பாஜக தலைவர்களின் கொள்கைகளை பார்த்து தான் நான் 24 ஆண்டுகளுக்கு முன்பே பாஜக வில் இணைந்தேன் என்றார்.அதனைத்தொடர்ந்து புதுச்சேரிக்கு ஏற்ற கட்சி பாஜக தான் என புகழுரை ஆற்றினார்.

புதுச்சேரியில் நியாயமான ஆட்சி தேவைபடுகிறது அதற்கு சரியான ஆட்சி பாஜக தான் என்றார்.கேஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல்,டீசல் விலை உயர்வுக்கு பாஜக காரணமல்ல என்று கூறினார்.அதற்கு மத்திய அரசும்,மாநில அரசுகளும் தான் காரணம்  என்றார்.இதைப்பற்றி நிதித் துறை மற்றும் பொருளாதாரம் சார்ந்தவர்களை அழைத்து பேச்சுவார்த்தையை மேற்க்கொண்டால் புதியதாக வழி பிறக்கும் என்றார்.அதுமட்டுமின்றி தற்போது விலை வாசியை பற்றி எதுவும் பேச வேண்டாம்.அதனை பற்றி மக்களுக்கே தெரியும் என்று கடைசியாக கூறி விடைபெற்றார்.

தமிழகத்தில் பாஜகவை எதிர்த்து கமல் போட்டியிடுகிறார்.அதே புதுச்சேரியில் நடிகை கவுதமி பாஜக வுக்கு ஆதரவு  தெரிவித்து வருகிறார்.இவர்களது இந்த போட்டியானது பார்ப்பவர்களுக்கு அதிக சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது.இருவருக்கும் இடையில் உள்ள கருத்து வேறுபாட்டால் ஒருத்தரை எதிர்த்து ஒருத்தர் ஆதரவு தெரிவிக்கின்றனர் எனக் கூருகிறார்கள்.