பாலச்சந்தர் படத்தில் நடிக்க மறுத்த கமல்!! நான் சம்பளம் இல்லாமல் நடிக்கிறேன் என ஒப்புக்கொண்ட நடிகர்!!

Photo of author

By Gayathri

இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் அவர்களின் படத்தில் கமலஹாசன் அவர்கள் நடிக்க மறுத்துவிட்டார். அவருக்கு பதிலாக விஜயகாந்தை நடிக்க கூப்பிட்டுள்ளார் பாலச்சந்தர் அவர்கள். மேலும் அப்பிடத்தில் நடித்த விஜயகாந்த் அவர்கள் அந்த படத்திற்கு சம்பளம் வாங்க மறுத்துள்ளார்.

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் விஜயகாந்த். கேப்டன் என்று அழைக்கப்பட்ட இவர், படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் சமமான சாப்பாடு கொடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டவர். அதன்படி தொடர்ந்து அதை தனது படத்தின் படப்பிடிப்பில் கடைபிடித்தவர் விஜயகாந்த். மேலும் பல புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பாலச்சந்தரின் ஒரு படத்தில் கூட நடித்ததில்லை. இருந்தபொழுதும் ஒரு சமயத்தில் கே பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான மனதில் உறுதி வேண்டும் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடிப்பதற்காக விஜயகாந்தை கே. பாலச்சந்தர் அவர்கள் அழைத்துள்ளார்.

1987-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான படம் மனதில் உறுதி வேண்டும்.சுஹாசினி முக்கிய கேரக்டரில் நடித்த இந்த படத்தில், ரமேஷ் அரவிந்த், விவேக், எஸ்.பி.பாலசுப்பிரமணியன் ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் வரும் ‘வங்காள கடலே’ என்ற பாடலில், ரஜினிகாந்த் சத்யராஜ் விஜயகாந்த் ஆகியோர் நடித்திருப்பார்கள். முதலில் இந்த கதாபாத்திரத்தில் விஜயகாந்த்திற்கு பதிலாக கமலஹாசனின் அடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் கமலஹாசன் மறுக்கவே இந்த வாய்ப்பு விஜயகாந்துக்கு சென்றுள்ளது.

இந்த வாய்ப்பினை மறக்க கமலஹாசன் கூறிய காரணம், சுஹாசினி என் அண்ணன் மகள், நான் அவருடன் ஆடினால் அது செட் ஆகாது. நன்றாக இருக்காது என்பது தான்.

அதன்பிறகு இந்த வாய்ப்பு விஜயகாந்துக்கு சென்றுள்ளது. அவரும் கே.பாலச்சந்தர் அழைத்ததன் பேரில், அனைத்து வேலைகளையும் விட்டுவிட்டு வந்து இந்த பாடல் காட்சியில் நடித்து கொடுத்துள்ளார். இதற்காக இயக்குனர் கே.பாலச்சந்தர் சம்பளம் கொடுத்தபோது, நான் உங்கள் மீது இருக்கும் மரியாதைக்காக இதை செய்தேன். எனக்கு சம்பளம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.