சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்பார்’ அட்டகாசமான மோஷன் போஸ்டர்

0
240

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ’தர்பார்’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே. தமிழில் கமலஹாசன், மலையாளத்தில் மோகன்லால், தெலுங்கில் மகேஷ்பாபு மற்றும் இந்தியில் சல்மான்கான் ஆகியோர் இன்று மாலை 5.30 மணிக்கு ஒரே நேரத்தில் ’தர்பார்’ படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்

இந்த நிலையில் கமல்ஹாசன் வெளியிடப்பட்ட தமிழ் மோஷன் போஸ்டர் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. ஆதித்யா அருணாச்சலம் என்ற கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்து உள்ளார் என்பது இந்த மோஷன் போஸ்டர் மூலம் உறுதியாகியுள்ளது. மேலும் போலீஸ் உடையில் அட்டகாசமாக எதிரிகளை கத்தியால் தாக்கும் காட்சியும் மோஷன் போஸ்டரில் உள்ளது.

அனிருத்தின் அட்டகாசமான பின்னணி இசையின் இடையில் ’தலைவா’ என்ற வார்த்தையும் உள்ளது ரஜினி ரசிகர்களுக்கு சரியான விருந்து. இந்த மோஷன் போஸ்டர் வெளியான ஒரு சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்ஸ்களை இந்த மோஷன் போஸ்டரின் வீடியோ பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

கமல்ஹாசன் பிறந்த நாளில் கமலஹாசனின் டுவிட்டர் பக்கத்தில் ரஜினி படத்தின் மோஷன் போஸ்டர் ஒன்று வெளியாகி இருப்பது இருதரப்பு ரசிகர்களுக்கும் ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Previous articleபட்டப்பெயர், பட்டாசு வேண்டாம்: தொண்டர்களுக்கு உதயநிதியின் கண்டிப்பு அறிக்கை
Next articleநாளை நீதிமன்றம் செல்லவுள்ளோம்: நடிகர் சங்க நிர்வாகிகள் பேட்டி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here