திடீரென்று எதிர்கட்சி பக்கம் சாய்ந்த கமல்! மனுவில் என்ன கூறினார் தெரியுமா?

0
118
Kamal suddenly leaned towards the opposition! Do you know what was said in the petition?
Kamal suddenly leaned towards the opposition! Do you know what was said in the petition?

திடீரென்று எதிர்கட்சி பக்கம் சாய்ந்த கமல்! மனுவில் என்ன கூறினார் தெரியுமா?

தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாத 6-ம் தேதி நடந்து முடிந்தது.இந்நிலையில் மக்கள்,கோட்டையை கைப்பற்ற போவது யார் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.வாக்கு பதிவு முடிந்த மறுநாளே திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை தொண்டர்களுக்கு வெளியிட்டார்.

அதில் அவர் கூறியதாவது,பெட்டிகள் மாற அதிக வாய்ப்புகள் உள்ளது..இனி தான் திமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என கூறினார்.அதுமட்டுமின்றி இரவு பகல் பாராமல் கண்காணிக்க வேண்டும் என்று கூறினார்.அதுமட்டுமின்றி திமுக தான் வெற்றி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என தெரிவித்தார்.

இவர் கூறியதைப்போலவே வாக்குச்சாவடி மையத்தில் பல குளறுபடிகள் நடந்த வண்ணமாக தான் உள்ளது.அதனால் பல குற்றச்சாட்டுக்களை திமுகவினர் கூறி வருகின்றனர்.அந்தவகையில் திமுகவை போலவே தற்போது மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கம்ஹாசனும் தனது கோரிக்கையை தேர்தல் ஆணையத்திற்கு மனு மூலம் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது,வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடத்திற்க்கு தற்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வந்து செல்வதாகவும்,திடீரென்று வாகனங்கள் வாக்கு பெட்டிகள் உள்ள மையத்திற்கு வருவதாகவும் எதிர்கட்சி வேட்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுத்தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதுமட்டுமின்றி வாக்கு எண்ணிக்கை நியாயமான முறையில் நடைபெற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.தேர்தல் ஆணையம் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு-விற்கு மனு அளித்துள்ளார்.

இவர் மனுவில் தனது கட்சியினர் கூறுகின்றனர் என எதுவும் கூறாமல் நேரடியாக எதிர்கட்சியை குறிப்பிட்டுள்ளார்.தேர்தலுக்கு முன்பே இவர் திமுக பக்கம் போகலாம் என்று பேசிவந்த நிலையில் தற்போது தேர்தல்  முடிவடைந்த நிலையில் திமுகவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பது அரசியலில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஇரு நாட்களுக்கு மதுபான கடைகளை மூடும் படி அதிரடி உத்தரவு! வருத்தத்தில் மது பிரியர்கள்!
Next articleBREAKING: மருத்துவ ஆய்வாளர் வெளியிட்ட குட் நியூஸ்! கொரோனாவை தடுக்க இது சாப்பிட்டால் போதும்!