கமல் தயாரிப்பில் அடுத்தடுத்து இளம் நடிகர்கள்… புதுசா லிஸ்ட்ல சேர்ந்த ஹீரோ!

0
177

கமல் தயாரிப்பில் அடுத்தடுத்து இளம் நடிகர்கள்… புதுசா லிஸ்ட்ல சேர்ந்த ஹீரோ!

நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பாக அடுத்தடுத்து படங்களை தயாரித்து வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ரூபாய் 500 கோடி வசூலை எட்டி உள்ளது. விக்ரம் படத்திற்கு பிறகு கமலஹாசனின் மார்க்கெட் வேற லெவல் என்பதால் அடுத்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா என்ற கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்நிலையில் கமல் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக அடுத்தடுத்து படங்களைத் தயாரித்து வருகிறார். சிவகார்த்திகேயன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை வைத்து அடுத்தடுத்து படங்களை தயாரித்து வருகிறார். அந்த வரிசையில் இப்போது சிம்புவும் இணைந்துள்ளார்.

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் 53 ஆவது படத்தில் சிம்பு நடிக்க உள்ளார். இந்த படத்துக்கான இயக்குனர் மற்றும் மற்ற கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. மாநாடு படத்தின் மூலம் வெற்றியின் உச்சம் தொட்டுள்ள சிம்புவின் அடுத்தடுத்த படங்கள் அதிகளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

முன்னதாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் புது முயற்சியாக ஓடிடி தளத்தில் வெளியான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்காமல் அவருக்கு பதில் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு தொகுத்து வழங்கினார். மேலும் கமலின் விக்ரம் படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவிலும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிம்பு, கமல்ஹாசனை தன்னுடைய குருவாகவே நினைத்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleமீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தியது ரிசர்வ் வங்கி! கடனுக்கான வட்டி அதிகரிக்க வாய்ப்பு 
Next articleசொல்லவே வாய் கூசுது!.. காங்கிரஸ் பைரவம் தொகுதி தலைவரே இந்தச் செயலை செய்யலாமா?..