கமல் தயாரிப்பில் உதயநிதி நடிக்கும் புதிய படம்… இயக்குனர் இவரா?

0
283

கமல் தயாரிப்பில் உதயநிதி நடிக்கும் புதிய படம்… இயக்குனர் இவரா?

நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள புதிய படத்தின் இயக்குனர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

நெஞ்சுக்கு நீதி திரைப்படத்துக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ இயக்குகிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் வைகை புயல் வடிவேல் நடிக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜியன்ட்ஸ் மூவிஸ் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் தொடங்கி சேலம் மற்றும் ஏற்காடு ஆகிய பகுதிகளில் நடந்து வருகிறது.

இந்நிலையில் தேர்தலுக்கு முன்பே உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அந்த படத்தின் படப்பிடிப்பும் பெரும்பாலும் முடிந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்துக்கு டைட்டில் ‘கலக தலைவன்’  என்று வைக்கப்பட்டுள்ளது. இது பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இந்த படங்களுக்கு பிறகு சினிமாவில் இருந்து ஓய்வுபெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இதை சமீபத்தில் கமல்ஹாசன் அறிவித்தார். இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கிடாரி மற்றும் குயின் வெப் சீரிஸ் ஆகியவற்றை இயக்கிய பிரசாந்த் முருகேசன் இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்ற கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Previous articleஅஜித்தே போன் செய்து கதைகேட்ட இயக்குனர்… ஆனால் சந்திப்பு நடப்பதற்குள் சோகம்!
Next articleஈவு இரக்கமற்ற பெற்றோர்? பெற்ற ஒரே மகனை பழிவாங்கிய சைக்கோக்கள்!..