கே பாலச்சந்தர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது பலருடைய கனவாகவே மாறி இருக்கும் நிலையில், கமலஹாசன் அவர்களுடைய வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனை ஆக்க திகழ்ந்தவர் இயக்குனர் கே பாலச்சந்தர். அப்படிப்பட்ட குருநாதர் தன் படத்தில் நடிப்பதற்காக கமலஹாசனை கேட்ட பொழுது கமலஹாசன் நடிக்கும் மறுத்திருக்கிறார். அதன் பின் அவருடைய கதாபாத்திரத்திற்கு விஜயகாந்த் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறித்த விவரத்தை இந்த தொகுப்பில் காண்போம்.
இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த திரைப்படத்தில் சுஹாசினி, எஸ் பி பாலசுப்ரமணியம், ரமேஷ் அரவிந்த், விவேக் போன்ற பலர் நடித்திருக்கின்றனர். திரைப்படத்தில் வரக்கூடிய வங்காளக் கடலே என்ற பாடலில் நடிக்க ரஜினிகாந்த், சத்யராஜ் மற்றும் விஜயகாந்த் மூவரும் இணைந்து நடித்திருப்பார்.
இந்த பாடல் காட்சியில் நடிப்பதற்காகத் தான் இயக்குனர் கே பாலச்சந்தர் அவர்கள் நடிகர் கமலஹாசன் அவர்களை அழைத்திருக்கிறார். ஆனால் அவரோ சுகாசினி தன்னுடைய அண்ணன் மகள் என்றும் தன் அண்ணன் மகளோடு இணைந்து நான் நடனமாடுவது சரியாக இருக்காது எனக் கூறி மறுத்திருக்கிறார்.
அதன்பின் பாலச்சந்தர் அவர்கள் விஜயகாந்த் இடம் கேட்ட பொழுது தன்னுடைய அனைத்து வேலைகளையும் விட்டுவிட்டு இந்த பாடல் காட்சிகளை அவர் முடித்து கொடுத்துள்ளார். இதற்கான சம்பளத்தை இயக்குனர் கே பாலச்சந்தர் அவர்கள் கொடுத்த பொழுது உங்கள் மீதுள்ள மரியாதைக்காக தான் நான் இதை செய்தேன் என்றும் எனக்கு இந்த பணம் வேண்டாம் என்றும் கூறிவிட்டு விஜயகாந்த் அவர்கள் சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.