இயக்குனர் சங்கர் இந்தியன் படத்திற்காக முதலில் தேர்வு செய்தது கமலை அல்ல!! உதவியாளர் பாலன்!!

0
153
Kamala was not the first choice of director Shankar for Indian film!! Assistant Balan!!
Kamala was not the first choice of director Shankar for Indian film!! Assistant Balan!!

இயக்குனர் சங்கர் பிரம்மாண்டங்களுக்கு குறைவில்லாதவர் என்று கூறும் அளவுக்கு அவருடைய படங்கள் எடுக்கப்படும். அவ்வாறு எடுக்கப்பட்டு மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த படம் தான் “இந்தியன்”.

இந்திய நாட்டின் மீது அதிக தேசப்பற்று கொண்டவர் இந்திய நாட்டின் விடுதலைக்காக போராடி வெற்றி கண்ட பின் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். பின்னர் தன் மகளுக்கு நேர்ந்த துயரமான சம்பவத்தால் காவல் நிலையம் செல்கிறார் பயனில்லை, மருத்துவமனை செல்கிறார் பயனில்லை அனைத்து இடங்களிலும் ஊழல் மற்றும் லஞ்சம் தலைவிரித்து ஆடும் நிலையில் இந்த வயதான போர்வீரர் என்ன செய்யப் போகிறார் என்பதுதான் இப்படத்தின் கதைச்சுருக்கம் ஆக உள்ளது.

இப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நிலையில் மீண்டும் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி ரசிகர்களை பெரிதும் ஏமாற்றத்திற்கு உள்ளாகியது என்றும் கூறலாம். இந்தியன் 1 ஐ விட இரண்டாம் பாகம் இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் அவ்வாறு இல்லாததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

மேலும், இயக்குனர் சங்கர் அவர்கள் இந்தியன் படத்தை இயக்க நினைத்தபோது முதலில் இப்படத்தில் நடிக்க அவர் தேர்வு செய்தது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – தானாம். இதனை இப்படத்தின் உதவியாளராக பணிபுரிந்த வசந்த் பாலன் அவர்கள் அவருடைய பேட்டி ஒன்று தெரிவித்திருக்கிறார்.

இயக்குனர் சங்கர் இயற்றிய ஜென்டில்மேன் படம் மிகப்பெரிய வெற்றி படமாக உருவான நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் சங்கரை தொடர்பு கொண்டு தனக்கு ஏதேனும் ஸ்கிரிப்ட் இருக்கிறதா என்று கேட்டுள்ளார். அப்பொழுது இயக்குனர் சங்கர் அவர்களும் “பெரிய மனுஷன்” என்ற பெயரில் இந்த ஸ்கிரிப்ட்டை விளக்கியுள்ளார். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்ததால் அவரது கால் சீட் கிடைக்கவில்லை. அதனால் இந்த படத்தினுடைய ஸ்கிரிப்ட்டை கமலிடம் சென்று விலக்கியுள்ளார் சங்கர் அவர்கள். இவ்வாறே இந்தியன் படத்திற்கு ரஜினிக்கு பதில் தான் கமல் நடித்துள்ளார் என்று கூறப்பட்டிருக்கிறது.

Previous articleகிடப்பில் கிடக்கும் STR 48!! தயாரிப்பினை கைவிட்டாரா கமலஹாசன்!!
Next articleIPL 2025 நிக்கோலஸ் பூரனுக்கு இத்தனை கோடியா? மீண்டும் டெல்லி திரும்பும் ஸ்ரேயஸ் ஐயர்!!