ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உடன் நடிகர் கமலஹாசன்! அரசியல் நிலவரம் குறித்து பேச்சு

0
155

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உடன் நடிகர் கமலஹாசன்! அரசியல் நிலவரம் குறித்து பேச்சு

நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான திரு. கமல்ஹாசனின் 60 ஆண்டுகால கலைச்சேவையை பாராட்டி ஒடிசாவில் உள்ள செஞ்சுரியன் பல்கலைகழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளது. இந்த பட்டத்தை பெறுவதற்காக நேற்று கமலஹாசன் ஒடிசா சென்றுள்ளார் அங்கு அம்மாநில முதலமைச்சர் திரு நவீன் பட்நாயக் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

ஒடிசா மாநிலம் ஆர்.சீதாபூரில் அமைந்துள்ள செஞ்சூரியன் பல்கலைக்கழகம், கமல்ஹாசனின் கலைச்சேவையைப் பாராட்டி கவுரவ டாக்டர் வழங்குவதாக அறிவித்திருந்தது. நாளை நடைபெறும் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவின்போது, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் கமலுக்கு இந்த பட்டத்தை வழங்குகிறார்.

பரமக்குடியில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள மய்யம் திறன் மேம்பாட்டு மையத்திற்கு ‘கிராம் தரங்’ திட்டத்தின்கீழ் வழிகாட்டுதல் வழங்க செஞ்சூரியன் பல்கலைக்கழகம் விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்யுடன் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாகவும் தெரிகிறது.

Previous articleதிருமாவளவனின் சந்தர்ப்பவாத அரசியல்: ராஜபக்சே மகன் நமல் அறிக்கை
Next articleஅரசியல் ரீதியில் கமல்-ரஜினி இணைப்பு சாத்தியமா?