விஜய் நடிக்கும் ஜனநாயகன் கமல் எழுதிய கதையா?!.. என்னப்பா சொல்றீங்க!….

0
16
kamal
kamal

கோலிவுட்டில் நம்பர் ஒன் நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடித்தால் ரிலீஸுக்கு முன்பு தயாரிப்பாளருக்கு 350 கோடி வரை லாபம் கிடைத்துவிடுகிறது. இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் பிரேமம் பட புகழ் மமிதா பைஜூ முக்கிய வேடத்திலும் பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாகவும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

இந்நிலையில்தான், இப்படம் பற்றி பல முக்கிய தகவல்கள் வெளியே கசிந்திருக்கிறது. படம் உருவான போது இப்படம் தெலுங்கில் பாலையா நடித்து ஹிட் அடித்த பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக் என சொன்னார்கள். அந்த படத்தில் ஸ்ரீலீலா நடித்த கதாபாத்திரத்தில்தான் மமிதா பைஜூ நடிப்பதாகவும் சொன்னார்கள். ஆனால், இப்போது ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.

jananayagan

கமலுன் ஹெச்.வினோத்தும் இணைந்து ஒரு படம் உருவாகவிருந்தது. ஒரு வருடத்திற்கு மேல் இப்படத்தின் வேலைகள் நடந்து வந்தது. கமல் ஏற்கனவே எழுதிய ‘தலைவன் இருக்கிறான்’ என்கிற கதையைத்தான் படமாக எடுக்கவிருந்தனர். ஆனால், கமல் என்ன நினைத்தாரே ‘நீங்கள் வேறு படத்தை இயக்கிவிட்டு வாருங்கள். நம்முடைய படம் தாமதமாகும்’ என ஹெச்.வினோத்திடம் சொல்லிவிட்டார். அதன்பின்னர்தான் விஜயிடம் கதை சொல்லி ஜனநாயகன் படம் டேக் ஆப் ஆனது.

கமல் எடுக்க ஆசைப்பட்ட தலைவன் இருக்கிறான் கதையைத்தான் அவர் விஜய்க்காக விட்டு கொடுத்திருக்கிறார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். ஏனெனில் அது முழுக்க முழுக்க அரசியல் தொடர்பான கதை. தம்பி விஜய் இதில் நடிக்கட்டும் என கமலே வினோத்திடம் சொன்னாராம். விஜய்க்காக சில மாற்றங்களை செய்துள்ளனர். மேலும், படத்தில் பல அதிரடி அரசியல் வசனங்கள் இருப்பதாக சொல்கிறார்கள். ஜனநாயகன் படம் 2026 ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

Previous articleபெண்களுக்கு குஷியோ குஷி!! இனி 1000 இல்லை ரூ 1200.. அரசு அதிரடி அறிவிப்பு!!
Next articleஇந்த 1 முறை மட்டும் விடுங்கள்.. ஜான்ஸ் கேட்ட EPS மற்றும் OPS!! பிரதமர் எடுத்த அதிரடி முடிவு!!