தொகுதி மறு சீரமைப்பு என்கிற பெயரில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மக்களவை தொகுதிகளை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகள் இருக்கிறது. கடந்த சில வருடங்களாக இதில் அதிமுக அல்லது திமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே மாறி மாறி இந்த தொகுதிகளை கைப்பற்றி வருகிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுகவே வெற்றி பெற்றது. இந்நிலையில்தான், தொகுதி மறுசீரமைப்பு என்கிற பெயரில் தமிழகத்தில் இருக்கும் மக்களவை தொகுதிகளை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டது. மக்கள் தொகையை கணக்கிட்டால் தமிழகத்திற்கு 8 மக்களவை தொகுதிகள் குறைய வாய்ப்பிருக்கிறது.
அதேநேரம், பாராளுமன்றத்தில் திமுகவினர் எண்ணிக்கையை குறைக்கவும், திமுக பலமுடன் இருக்கக் கூடாது என்பதற்காகவே பாஜக இப்படி திட்டமிடுகிறது என திமுகவின் குற்றம் சொன்னார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தார். மேலும், இது தொடர்பாக விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தையும் அவர் நடத்தினார். இதில், பாஜக, நாம் தமிழர் கட்சியை தவிர மற்ற கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசியபோது ‘எந்த தேவையும் இன்றி பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு எனும் பேச்சை யாரு கிளப்புகிறார்கள், எந்த நேரத்தில் பேசுகிறார்கள், எதற்காக பேசுகிறார்கள் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். மாநில உரிமைகளில் தலையிடுவதும், வருடாந்திர பட்ஜெட்டில், தேர்தல் வரவிருக்கும் மாநிலங்களுக்கு மட்டுமே அதிக நிதி ஒதுக்குவதும், தமிழ்நாட்டுக்கான நியாயமான நிதிப் பகிர்வை மறுப்பதும், பேரிடர் காலங்களில் நமது கூக்குரலுக்கு செவிசாய்க்காததும், மும்மொழி கொள்கை எனும் பெயரில் இந்தியை திணிப்பதும், என் பேச்சை கேட்டால்தான் நிதி தருவேன் என்று மிரட்டுவதும், ஒன்றிய அரசுக்கு அழகில்லை’ என பேசினார்.
நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த கமலிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது ‘453 என்ற லோக்சபா உறுப்பினர்களின் எண்ணிக்கையை மாற்றக்கூடாது. நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்ததே இந்த 453 பேர்தான். உலகின் 3வது நாடாக இந்தியா வளரக் காரணமாக இருந்ததும் இந்த 453 பேர்தான்’ என பேசினார். ஆனால், லோக் சபாவில் மொத்தம் 543 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதை மற்றி 453 என கமல் 3 முறை பேசியிருக்கிறார். இதையடுத்து மனித உணர்ந்து கொள்ள இது மனிதக் கணக்கு அல்ல.. அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு என பலரும் அவரை கலாய்த்து வருகிறார்கள்.