கமல்ஹாசனின் தேவர் மகன்2 திரைப்படம்! இயக்குனர் யார் தெரியுமா?

Photo of author

By Parthipan K

கமல்ஹாசனின் தேவர் மகன்2 திரைப்படம்! இயக்குனர் யார் தெரியுமா?

Parthipan K

Kamalhaasan's thevarmagan2 update

கமல்ஹாசனின் தேவர் மகன்2  திரைப்படம்! இயக்குனர் யார் தெரியுமா?

நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் 1992ல் வெளியான திரைப்படம் தேவர் மகன்.இந்தத் திரைப்படத்தில் சிவாஜி கணேசன்,கவுதமி,நாசர்,ரேவதி,வடிவேலு,தலைவாசல் விஜய் ஆகியோரும் நடித்திருப்பார்கள்.ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் சார்பில் நடிகர் கமல்ஹாசன் இந்த படத்தை தயாரித்தார்.இந்த படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை கமல்ஹாசன் எழுதியுள்ளார்.மலையாள இயக்குனர் பரதன் இந்த படத்தை இயக்கினார்.இந்த திரைப்படம் பல பிரிவுகளில் 5 தேசிய விருதுகளை பெற்றது.சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதும் இதில் அடங்கும்.

பல வருடங்கள் ஆகியும் இந்த திரைப்படத்திற்கு உண்டான மதிப்பு இன்னும் குறையவில்லை.மேலும் தமிழ் சினிமாவின் சிறந்த திரைக்கதையில் இந்த படமும் இருக்கும்.இந்த படம் முழுவதும் மதுரை மாவட்டம் தூவலூரில் படமாக்கப்பட்டது.மேலும் தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியின் வாழ்வியலை அப்படியே காண்பித்து இருப்பார்.தேவர் என்கிற சாதியைச் சேர்ந்த மக்களின் நடைமுறையையும் அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளையும் இந்த படம் பேசியிருக்கும்.

இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்தான விவாதங்கள்,செய்திகள் குறித்து சில வருடங்களாகவே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.நடிகர் கமல்ஹாசன் இந்த திரைப்படம் குறித்தான அதிகாரத் தகவலை அறிவிப்பார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.இந்நிலையில் தற்போது இந்த திரைப்படம் குறித்தான செய்திகள் வருவதாக இருக்கின்றன.

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்த படத்தை மலையாள இயக்குனரான மகேஷ் நாராயணன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இருப்பினும் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.மலையாளத்தில் திறமையான இயக்குனர் மகேஷ் நாராயணன்.இனர் இதற்க்கு முன்பு மாலிக் என்ற திரைப்படத்தை இயக்கினார்.பகத் பாசில் நடித்த இந்த திரைப்படம் பெரும் வரவேற்பையும் அதே சமயத்தில் விமர்சனத்தையும் பெற்றது.