முதல்வரின் விமர்சனத்திற்கு எம்ஜிஆர் பாடல் மூலமாக பதில் தெரிவித்த கமல்!

Photo of author

By Sakthi

முதல்வர் உடைய பிக்பாஸ் விமர்சனத்திற்கு மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பதிலளித்து இருக்கிறார்.

சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அதிமுகவின் அரசை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து இருக்கின்றார். அதோடு இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் ஊழல்வாதிகள் என்று குற்றம் சாட்டி இருக்கிறார். அரியலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் தெரிவித்ததாவது நடிப்பிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் இப்பொழுது கமல்ஹாசன் கட்சியை ஆரம்பித்து இருக்கிறார் என்று தெரிவித்திருக்கின்றார்.

அதோடு பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி விமர்சனம் செய்த முதலமைச்சர் பிக்பாஸ் பார்த்தால் எந்த குடும்பமும் நன்றாக இருக்க இயலாது, நன்றாக இருக்கும் குடும்பத்தை கெடுப்பதற்காக தான் கமல் வேலை பார்க்கிறார் என்று குற்றம் சாட்டி இருக்கின்றார். அதோடு எம்.ஜி.ஆர் நாட்டுடைய மக்களுக்கு பயன் பெறும் நிறைய பாடல்களை பாடி இருக்கின்றார். ஆனால் கமல்ஹாசன் மக்களுக்கு பயன்படும்படியான ஏதாவது ஒரு செயலை செய்து இருக்கின்றாரா? என்று கேள்வி எழுப்புகின்றார் முதல்வர்.

இந்த விமர்சனத்திற்கு மக்கள் நீதி மையம் சார்பாக மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அந்த கட்சியின் தொழிலாளர் அணிச் செயலாளர் எஸ்.ஏ. பொன்னுசாமி மதுவை விற்பனை செய்து பல தாய்மார்கள் உடைய வாழ்க்கையை கெடுக்கும் அதிமுக அரசும் தமிழக முதலமைச்சரும் கமல்ஹாசனை விமர்சனம் செய்வது நகைபான செய்தி என்று தெரிவித்தார். நேர்மை என்கின்ற மக்கள் நீதி மையத்தின் கொள்கையை பார்த்து பல கழகங்களும், பயத்தில் இருக்கிறார்கள். அதே பயம் தான் இப்போது முதலமைச்சரையும் உளற வைத்திருக்கிறது என்று தெரிவித்தார்.

இந்த நிலையிலே, முதல்வர் உடைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் விதமாக, முதலமைச்சரும் பிக்பாஸ் பார்க்கின்றார் என்பது மகிழ்ச்சியைத் தருகின்றது என தன்னுடைய வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

எம்ஜிஆர் பாடல்கள் உடன் கமல் பாடல்களை முதலமைச்சர் ஒப்பிட்டு பேசிய நிலையில், சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார். அதில் மானமில்லை ஒரு ஈனம் இல்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார். எதிர்காலம் வரும் என் கடமை வரும் இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன். என்று எம்ஜிஆரின் பாடல் மூலமே பதிலளித்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.