கனகராஜ் கொலை வழக்கு பொய்யா சொல்றீங்க? தட்டி தூக்கிய காவல்துறையினர்!

0
145

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அங்கே சிசிடிவி கேமரா ஆபரேட்டராக வேலை பார்த்த வினோத் என்பவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அதோடு அவரை கொலை செய்த கும்பல் கொடநாடு பங்களாவில் இருந்த பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றது, இந்த கொலை கொள்ளை சம்பவம் தமிழக அரசியலில் மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கியது.

அதோடு இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்ற சமயத்தில் அந்த பங்களாவில் பாதுகாப்பிற்காக இருந்த காவல்துறையினரும் இல்லை, கொலை நடந்த சமயத்தில் அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது, இதனால் தமிழக அரசியல்வாதிகள் பலரின் மீது சந்தேகம் எழுந்தது.இந்த சூழ்நிலையில் சிசிடிவி ஆப்பரேட்டர் வினோத் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது, இதற்கிடையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் ஒரு விபத்தில் பலியானார்.

ஆனால் கனகராஜ் அவர்களின் மகன் தன்னுடைய தந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், தன்னுடைய தந்தைக்கு ஏற்பட்ட விபத்து தற்செயலாக நடந்ததா? அல்லது திட்டமிட்ட படுகொலையா? என்று சந்தேகத்தை எழுப்பி காவல்துறையில் புகார் மனுவை வழங்கினார்.

இந்த சூழ்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் அவர்களின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவருடைய அண்ணன் உட்பட 2 பேரை தனிப்படை காவல்துறையினர் நேற்று கைது செய்து உள்ளார்கள்.

கொடநாடு பங்களாவில் காவலாளி கொலை மற்றும் அந்த பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் உயிரிழந்தது விபத்தா அல்லது திட்டமிட்ட படுகொலை என்ற விதத்தில் காவல்துறையினர் மீண்டும் விசாரணை ஆரம்பித்தார்கள்.

சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிநவ் உத்தரவின்பேரில் தொடர்ச்சியாக கடந்த 22 ஆம் தேதி முதல் ஆத்தூர் துணை காவல் துறை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையிலான காவல்துறையினர் கனகராஜன் உறவினர் ரமேஷ் உள்ளிட்டோர் இடம் விசாரணை நடத்தி வந்தார்கள்

இந்த சூழ்நிலையில், கொடநாடு வழக்கு குறித்து தடையங்களை வழங்குவதற்காக சேலம் மாவட்டம் எடப்பாட யை சேர்ந்த கனகராஜ் சகோதரர் தனபால், அவருடைய உறவினரான ஆத்தூரை சேர்ந்த ரமேஷ், உள்ளிட்ட இருவரையும் காவல்துறையினர் நீலகிரி மாவட்டம் சூலூர் நத்தம் காவல் நிலையத்திற்கு வர வேண்டும் என்று தெரிவித்தார்கள். அப்படி அங்கே வந்த அந்த நபர்களிடம் விசாரணை நடத்தியதில் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தார்கள்.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரையும் நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர், இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி சஞ்சய் பாபா அந்த இருவரையும் எதிர்வரும் 8ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார் இதனை அடுத்து இரண்டு நபர்களும் கூடலூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடப்பதற்கு முன்பாகவே இதுகுறித்த தகவல் ரமேஷ் மற்றும் தனபால் உள்ளிட்டோருக்கு தெரிந்து இருப்பதாகவும், அதனை அவர்கள் விசாரணையில் தெரிவிக்காமல் மறைத்து விட்டதாகவும், ஆகவே இருவர் மீதும் சாட்சிகளை மறைத்தல், அழித்தல், சாட்சி சொல்ல விடாமல் தடுத்தல், உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இருப்பதாகவும், காவல்துறையின் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றன.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் மரணம் மற்றும் பங்களாவின் சிசிடிவி கேமரா ஆபரேட்டர் வினோத் உள்ளிட்டோரின் மரணம் தொடர்பாக இன்னும் விசாரணை நடைபெற்று வரக்கூடிய நிலையில், விசாரணை நேர்மையாக நடைபெறும் ஆனால் தமிழக அரசியல்வாதிகளில் பலர் சிக்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு தமிழகத்தின் பல முக்கிய புள்ளிகளும் இதில் கைதாகலாம் என்று அஞ்சப்படுகிறது.

Previous articleதீபாவளி பண்டிகையையொட்டி ரேஷன் கடைகளில் சூப்பர் அறிவிப்பு.!!
Next articleமகள் பேச்சால் ரஜினிக்கு பிரச்சனை; ‘அண்ணாத்தே’ திரைப்படத்தை புறக்கணிக்க வலியுறுத்தல்!