காஞ்சிபுரத்தில் அ.தி.மு.க பேனர்கள் அகற்றம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

Photo of author

By Parthipan K

காஞ்சிபுரத்தில் விதிகளை மீறி வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க பேனர்களை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் அகற்றி வருகின்றனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் காஞ்சிபுரம், செல்கல்பட்டு ஆகிய இரண்டு மாவட்டங்களின் வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகளுக்கான விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவுள்ளார். இதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் விதிகளை மீறி ஆக கிலோமீட்டர் தொலைவில் சாலையின் இருபுறமும் அ.தி.மு.க பேனர்கள் மற்றும் கட் அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவின் பேரில் விதிகளை மீறி வைக்கப்பட்ட அ.தி.மு.க பேனர்களை காவல்துறையினர் அகற்றி வருகின்றனர். குறிப்பாக காஞ்சிபுரத்தில் மேட்டுத்தெரு, மூங்கில் மண்டபம், ரங்கசாமிக்குளம், காந்திசாலை, காமராஜர் சாலை ஆகிய பகுதிகளில் அ.தி.மு.க.வின் பேனர்கள், கட் அவுட்டுகள் அகற்றப்பட்டுள்ளன. காஞ்சிரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே முதல்வர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பேனர்களை அதிகாரிகள் தற்போது வரை அகற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காஞ்சிபுரத்தில் முதல்வர் பங்கேற்க உள்ள நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அதிகாரிகள் அகற்றியதும் அ.தி.மு.க.வினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.