காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தைக்கு முறையாக சிகிச்சை அளிக்காததால் குழந்தை உயிரிழப்பு
காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியில் சேர்ந்தவர் சரவணன் இவருடைய மனைவி கார்த்திகாவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை பெண் குழந்தை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பிறந்தது. காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கடந்த 4ங்கு நாட்களாக தாயும் சேயும் சிகிச்சை பெற்று வந்தனர். குழந்தை பிறந்ததிலிருந்து பால் குடிப்பதற்கு சற்று சிரமப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை 4 30 மணி அளவில் குழந்தைக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து அங்கு பணியில் இருந்த செவிலியர் சுதாவிடம் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது, மருத்துவரிடம் காட்ட வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் பணியிலிருந்த செவிலியர் சுதா இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் காலை பார்த்துக்கொள்ளலாம் என்று கூறி விட்டதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் கேட்டபோது, உடனடியாக இது குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும், செவிலியர் மீது தவறு இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இந்நிலையில், நேரம் செல்ல செல்ல குழந்தையின் நிலைமை மிகவும் மோசமாகி கை ,கால்கள் அனைத்தும் செயலிழக்க தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து குழந்தையின் தாய் கார்த்திகா கூச்சலிட்டு உள்ளார். அதன் பின்னரே குழந்தைக்கு காலை 7 மணி அளவில் சிகிச்சை அளிக்க அவசர சிகிச்சை பிரிவிற்கு கொண்டு சென்றுள்ளனர். பலமணிநேரம் சிகிச்சை இல்லாமல் தவித்த குழந்தை அங்கு சிகிச்சை பலனின்றி 7 30 மணி அளவில் உயிரிழந்துள்ளது. இதனை அறிந்த பெற்றோர் கதறி அழுதது பார்ப்போர் நெஞ்சை பதைபதைக்க வைத்தது.