தீயசக்தி, கண் திருஷ்டி அகல எளிமையான பரிகாரம்!

Photo of author

By Kowsalya

ஒரு சிலர் வீட்டில் எப்பொழுது பார்த்தாலும் சண்டையாகவே இருக்கும். நிம்மதியை இழந்து அலைந்து திரிவர். மற்றவர்கள் நமக்கு வைக்கும் சக்தி யாக இருக்கலாம் அல்லது கண் திருஷ்டி கூட இருக்கலாம். மூன்றே நாட்களில் எளிமையான தீயசக்தி கண் திருஷ்டி அகல பரிகாரத்தை பார்க்கலாம்.

 

நம் முன்னோர்கள் நம் வீட்டில் ஏதாவது ஒரு நல்ல காரியம் நடந்தால் நமக்கு சுற்றி போடுவார்கள்.அது அனைவருக்கும் ஞாபகம் இருக்கும். காரணம் கண்திருஷ்டி பட்டு விடக்கூடாதே என்பதற்காக தான். அப்படி நாம் செய்யாவிடில் நமக்கு ஏராளமான பிரச்சனைகள் வருவதை நாம் உணர்ந்திருப்போம். ஒருவர் வீட்டில் தீய சக்தி இருக்கிறது என்றால் அந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் உடல்நல குறைபாடு ஏற்படும் தொடர்ந்து மருத்துவ செலவுகள் செய்யும்படி அமைந்துவிடும்.

இம்மாதிரியான கண் திருஷ்டி தீயசக்திகள் அகல பரிகாரங்கள் செய்யப்படுகின்றன.

1. முதலில் வரமிளகாய் மூன்று, பருத்திக்கொட்டை 3 , ஓமம் ஒரு கைப்பிடி அளவு இவை மூன்றையும் எடுத்து கொள்ளுங்கள்.

2. வீட்டில் தூபம் காட்டும் கரண்டியை எடுத்து அதில் கற்பூரத்தை பற்ற வைக்கவும்.

3. இப்பொழுது வர மிளகாயை எடுத்து வைத்து தலையை சுற்றி மூன்று முறை சுற்றவும்.

4. ஓமத்தை எடுத்து தலையை சுற்றி மூன்று முறை சுற்றவும்.

5. பருத்திக் கொட்டை எடுத்து தலையை சுற்றி மூன்று சுற்று சுற்றவும்.

6. மூன்றையும் எரியும் நெருப்பில் போட்டு விடவும்.

7. அதனுடன் இரண்டு மா குச்சி, 2 வெள்ளெருக்கு குச்சியை போட்டு எரிய விடவும்.

இந்த பரிகாரத்தை தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து பாருங்கள். கண்டிப்பாக கண் திருஷ்டியும் தீய சக்திகளும் விலகுவது உங்கள் கண்கூடாக பார்க்க முடியும்.